உறையூர் ஸ்ரீ விக்னேஷ் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
போலீஸ் துணை கமிஷனர் அன்பு, பள்ளி அணிவகுப்பில் சிறந்த அணியாக சிவப்பு அணியை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கினார்.
ஒட்டுமொத்த சிறந்த அணியாக பச்சை அணி தேர்ந்தெடுக்கப்பட்டது.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவில், அறங்காவலர்கள் சகுந்தலா, லட்சுமி பிரபா, தலைவர் கோபிநாதன், இயக்குனர் வரதராஜன், ஆலோசகர் மலர்விழி, முதல்வர் கிருத்திகா, துணை முதல்வர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.