fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

கோவை, துடியலூர் வட்டமலை பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 24-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஆர்.அலமேலு வரவேற்றார்.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர், பெங்களூரு ஜெனரல் எலெக்ட்ரிஸின் (விமான போக்குவரத்துத்துறை) நிர்வாகம் மற்றும் தலைமை ஆலோசனை பொறியாளர் உமா மகேஷ்வர் பேசியதாவது:

வரும் ஆண்டுகளில் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும். தொடர்ந்து கற்றுக்கொண்டு நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

வாழ்நாள் முழுவதும் கற்ப வர்களாகவும், பூமியையும் அதன் வளங்களையும் நிலைநிறுத்துவது குறித்து சிந்திக்கவும், நெக்ஸ்ட்ஜ்ன் தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

கிடைக்கப்பெற்ற தலைமுறை வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி முக்கிய பதவிகளை வகிப்பதோடு, உலகத் தரம் வாய்ந்த தலைவர்களாக உருவாக வேண் டும் என்றார்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஏரோனாடிகல் இன்ஜினியரிங், எலக்ட் ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் இன்ஜினியரிங், எம்.பி.ஏ., எம்.ஈ. அண்ட் எம்.டெக். துறையை சேர்ந்த 511 மாணவ, மாண வியருக்கு பட்டம் வழங்கினார்.

பல்வேறு துறைகளின் சார்பில் முதல் மதிப்பெண் பெற்ற 15 பேருக்கு தங்கப்பதக்கங்களும் சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

துணை முதல்வர் ப.கருப்புசாமி, துறைத் தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img