fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்களுக்கு “பூமி கேம்பஸ்” விருது

ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்களுக்கு “பூமி கேம்பஸ்” விருது

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் பூமி கேம்பஸ் விருது பெற்றனர்.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே உள்ள கொண்டனூர் பழங்குடியினர் கிராம மக்களின் பயன்பாட்டிற்காக, அமெரிக்காவின் ஆலோமோ கல்லூரியின் ஆதரவுடன், ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் எஸ்.பிரகதீஸ்வரன் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஒருங்கிணைந்து சூரிய ஒளிமின் தகடுகளை சமீபத்தில் பொருத்தினர்.

இதேபோல், இக்கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் எஸ்.பூங்குழலி நேரடி கண்காணிப்பில், கொண்டனூர் பழங்குடியின கிராம மாணவர்கள் 25 பேருக்கு மின்னணு கருவிகளைக் கையாளுதல், சோலார் மின் தகடுகளைப் பொருத்துதல் ஆகியவற்றிற்கு கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இச்சமூகப் பொறுப்பு மற்றும் மாணவர்கள் மூலம் சேவைகளைச் செய்தமைக்காக, சென்னையில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற விழாவில் பூமி கேம்பஸ் விருதுகள் வழங்கப்பட்டன.

அதில் ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் டி.சந்தானகிருஷ்ணன், முனை வர் டி.பிரபு வெங்கடேஷ் ஆகியோர் “பூமி கேம்பஸ்” விருது பெற்றனர்.

மாணவர்கள் மற்றும் பேராசிரியர்க ளின் சாதனையை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி பாராட் டினார்.

படிக்க வேண்டும்

spot_img