தர்மபுரி இலக்கியம் பட்டியல் இயங்கி வரும் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியில் 2020, 2021 2022- மூன்று ஆண்டிற்கான 8-வது பட்டமளிப்பு விழா வின்சென்ட் திருமண மண் டபத்தில் நடைபெற்றது.
கல்லூரி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இயக்குனர் மருத்துவர் அசோக்குமார், சேர்மன் மருத்துவர் மோகனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக நீதிபதி பாலு, மருத்துவ இணை இயக்குனர் (ஓய்வு) டாக்டர் தமிழரசன், தரும புரி முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினர் தாமரைச்செல்வன், காவல் ஆய்வாளர் ரங்க சாமி, மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணி, கூடுதல் அரசு வழக்கறிஞர் கள் பாலு, சிவம் ஆகியோர் பங்கேற்றனர்.
டிப்ளமா இன் பிராக்டிக் கல் நர்சிங், டிப்ளமோ இன் மெடிக்கல் லேப் டெக் னாலஜி, டிப்ளமோ இன் ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, டிப்ளமோ இன் ஐசியு டெக்னாலஜி, டிப்ளமோ இன் எமர்ஜென்ஸி அண்டு ட்ரோமோ கேர் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் இருந்து மருத்துவப் படிப்பு முடித்த 73 மாணவ, மாணவி களுக்கு பட்டங்கள் வழங் கப்பட்டன.
பல்கலைக்கழகத் தேர்வில் முதலிடம் பிடித்த, டிப்ளமோ இன் மெடிக்கல் லேப் டெக்னாலஜி மாணவி கலையரசிக்கு 10,000 ரூபாய் காசோலை வழங்கப்பட்டது. கல்லூரி நிர்வாக அலு வலர் ஜோதிபாசு நன்றி கூறினார்.