fbpx
Homeபிற செய்திகள்ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்- எ.வ.வே.கம்பன் வழங்கினார்

ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்- எ.வ.வே.கம்பன் வழங்கினார்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கனந்தம்பூண்டி ஊராட்சியில் உள்ள ஏரிக்கரை பகுதியில் திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்த நாள் விழாவையொட்டி 1000 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இவ்விழாவுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.மனோகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மெய்யூர் சந்திரன், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி ஆகியோர் முன்னிலை வகிக்க ஒன்றியக்குழு உறுப்பினர் செ.சுபாசெல்வமணி அனைவ ரையும் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், கனந்தம்பூண்டி ஏரிப்பகுதியில் 1000 பழவகை உள் ளிட்ட மரக்கன்றுகள் நடும்விழாவை துவக்கிவைத்து மரக்கன்றுகளை நட்டார்.

சுயஉதவிக்குழுக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கியதோடு கனந்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வீட்டிற்கும் அரிய வகை மரக்கன்றுகளையும் வழங்கிய அவர் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவினை வழங்கினார்.

இந்த விழாவில் நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இல.சரவணன் ஒன்றியக்குழு உறுப்பினர் மெய்யூர் பச்சையப்பன் கனந்தம்பூண்டி கிளை கழக செயலாளர் கே.பன்னீர்செல்வம், ஊராட்சி மன்ற தலைவர்கள் கே.ராஜேந்தி ரன், நடராசன், பி.ராஜேந்திரன், துணைத் தலைவர் ஏ.சீனுவாசன், மாவட்ட இளைஞரணி தனபதி, திமுக முக்கிய பிரமுகர்கள் எம்.தனசேகரன், வி.தேவேந்திரன், எஸ்.ஞானவேல் பி.செல்வராஜ் ஏ.கே.மணி, வி.சுந்தர்ராஜன், மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கிராம முக்கிய பிரமுகர்கள் மகளிர் குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண் டனர்.

முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் பி.கணேசன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img