வெள்ளலூர் இலக்கிய மன்ற விழாவில் இரண்டு கவிதை நூல்கள் வெளியி டப்பட்டன. வெள்ளலூரில் கடந்த 24-ம் தேதி நடந்த இந்த விழாவுக்கு, வெள்ளலூர் இலக்கிய மன்றத்தின் அமைப்பாளர் வெ.கோ.பாலதண்டபாணி தலைமை தாங்கினார்.
கவிஞர் தி.துரைசாமி எழுதிய “உன்னைச் செதுக்கு”, “காதல் வானில்” ஆகிய கவிதை நூல்களை, மதுரை யாதவர் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறை உயராய்வு மையத் தலைவர் முனைவர் இ.கி.ராமசாமி வெளியிட்டார்.
மயில்மணி பதிப்பக நிறுவனர் கவி ஞர் சோ.ம.செயராசன் பெற்றுக் கொண்டார்.
“உன்னைச் செதுக்கு” நூல் பற்றி கவிதாயினி வே.சண்முகதேவியும், “காதல் வானில்” நூல் பற்றி பேராசிரியர் கவிஞர் ஆதித் சக்திவேல் ஆகியோர் திற னாய்வு உரையாற்றினர்.
சிறப்பு விருந்தினராக யாதவர் கல்லூரியின் மேனாள் பேராசிரியை மு.கஸ்தூரிபாய் கலந்து கொண்டார். கவிஞர் சுப்பையனின் சோளிய கவுண்டர் வள் ளியம்மை அறக்கட்டளை சார்பாக கவிஞர்கள், கல்வியாளர்கள், பொது நலப் பணியாற்றியவர்க ளுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இ.வெ.வீரமணி பாரதிதாசன் பாடல்க ளைப் பாடினார். நிகழ்ச்சிகளை கவிஞர் நிலாபாரதி ஒருங்கிணைப்பு செய்து தொகுத்து வழங்கினார். கவிஞர் கே.பி.ஈஸ்வரன் வரவேற்றார். கேசவன் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடு களை வெள்ளை விழுதுக ளின் அமைப்பாளர்கள் கேசவன் (எ) வெங்க டேஸ்வரன், கவிஞர் வெ.கு. முனுசாமி, வழக்கறிஞர் வி.நாகராஜ், தாமோதரன், ஜெகதீஸ்வரி, கார்த்திகா, ராஜேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.