fbpx
Homeபிற செய்திகள்வெற்றி பெறுவதே நோக்கமாக இருக்க வேண்டும் மாணவர்களுக்கு தெலுங்கானா ஆளுநர் அறிவுறுத்தல்

வெற்றி பெறுவதே நோக்கமாக இருக்க வேண்டும் மாணவர்களுக்கு தெலுங்கானா ஆளுநர் அறிவுறுத்தல்

மாணவர்களின் ஒற்றை நோக்கம், வெற்றி பெற வேண்டும் என்பதாக மட்டும் இருக்க வேண்டும் என்று தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.
கோவை திருமலையாம்பாளை யத்தில் உள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25- ம் ஆண்டு விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் பி. அனிருதன் வரவேற்றார்.

நேரு கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் வழக்கறிஞர் முனைவர் பி.கிருஷ்ணதாஸ் தலைமை தங்கினார். நேரு கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், செயலாளருமான முனைவர் பி.கிருஷ்ணகுமார் வாழ்த்துரை வழங்கினார்.

தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:

கூட்டம், மருத்துவ மாநாடு என எதில் பங்கேற்றாலும் தயக்கம் இருக்காது. ஆனால், மாணவர்களிடையே பேசும்போது தயக்கம் இருக்கும். மாணவர்கள் அனைவரும் அறிவாளிகள். வாழ்க்கையில் ஒழுங்குமுறையை நாம் கொண்டு வரவேண்டும். ஒவ்வொரு மணி நேரத்தையும் திட்டமிட்டு வாழ வேண்டும். அதனால் வெற்றி பெற முடியும்.

வாழ்க்கையை சரியாக தேர்ந்து எடுக்க வேண்டும். நீங்கள் எல்லாரும் வெற்றியாளர்களாக வரவேண்டும். தன்னம்பிக்கை இருக்க வேண்டும் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் எதிர்கொள்ள வேண்டும். விவேகானந்தர் கூறும் போது, எனக்கு கடல்நீரை அனைத்தையும் குடித்து விடும் சக்தி உள்ளது. சக்தியோடு சேர்ந்த வாழ்க்கை முன்னேற்றம் என தெரிவித்தார். உங்கள் வாழ்க்கையை அமைக்கும் உரிமை உங்களிடம் உள்ளது. கரை மீது ஓடினால் நதி, அதனை மீறி போனால் காட்டாற்று வெள்ளம்.

வாழ்க்கை நெறிமுறையை கடைபிடியுங்கள். மாணவர்களின் ஒற்றை நோக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதாக மட்டும் இருக்க வேண்டும் என்றார்.
ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளுக்கு ஆளுநர் விருது வழங்கி கௌரவித்தார்.

சமூக முன்னேற்றத்திற்காக நன்முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் 25 சமூகப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், வணிகவியல் துறை மற்றும் சமூகப்பணியியல் துறை சார்பாக, விருதுகள் வழங்கப்பட் டன.

வணிகவியல் துறை மற்றும் சமூகப் பணியியல் துறைப் புல முதன்மையர் முனைவர் கனகரத்தினம் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img