இந்திய ரிசர்வ் வங்கி, ரிசர்வ் பாங்க் இன்னோவே ஷன் ஹப் மற்றும் தமிழ்நாடு அரசின் உயரதிகாரிகள் சென்னையில் கலந்துகொண்ட விழாவில் இன்ஸ்டன்ட் கிஸான் கிரெடிட் கார்டுக்கான (KCC) (விவசாயிகளுக்கான உடனடி கடன் அட்டை) முன்னோடித்திட்டத்தை பெடரல் வங்கி அதி காரப்பூர்வமாக தொடங்கி யிருக்கிறது.
வேளாண் துறையில் நிதி வழங்கலில் முதன் முறையாக டிஜிட்டல் கடன் செயல்திட்டம் செயல்பட இருக்கிறது.
ரிசர்வ் பாங்க் இன் னோவேஷன் ஹப் ((RBIH)-ன் தலைமை செயலாக்க அதிகாரி ராஜேஷ் பன்சால், இச்செயல்திட்டத்தின் அறிமுகம் குறித்து கூறிய தாவது: இந்தியாவில் கிராமப்புற / ஊரக நிதி / கடன் என்பது பொருளாதார வளர்ச்சியோடு நெருக்க மான பிணைப்பை கொண்டிருக்கிறது.
இத்த கைய சூழலில், RBI-ன் ஒத்துழைப்போடு கிஸான் கிரெடிட் கார்டு (KCC)கடன் வழங்கல் செயல்பாட்டில் தொடக்கத்திலிருந்து இறுதிவரை டிஜிட்டல் மயமாக்கலுக்கான ஒரு முன்னோடி செயல்திட் டத்தை ஸிஙிமிபி-ல் உருவாக் கியிருக்கிறோம்.
தமிழ்நாட்டில், விவசாயிகளுக்கு சிரமமில்லாமல் எளிதாக கடன் வசதி கிடைக்கப் பெறுவதற்கான சாத்தியங்களை திறந்து வைக்கிறது என்றார்.
பெடரல் வங்கியின் மேலாண் இயக்குநர் மற் றும் தலைமை செயல் அலுவலர் ஷியாம் சீனிவாசன் கூறியதாவது:
தொழில் நுட்பத்தின் உதவியோடு, விவசாயிகளுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளை வழங்கு வதற்கு இச்செயல் திட்டம் உதவும். முறைப்ப டுத்தப்பட்ட வங்கி சேவை அமைப்பிலிருந்து கடன் பெறுவதற்கு எளிதான அணுகுவசதி என்ற இலக்கை நோக்கி மாறும் செயல்திட்டத்தை இந்த அறிமுகம் துரிதமாக்கும்.
பொருளாதாரத்தை முறைப்படுத்துதல் என்ற குறிக்கோளை நோக்கி எடுத்துவைக்கப்படும் மிக முக்கியமான மற்றும் உறுதியான நடவடிக்கை களில் ஒன்றாக இது இருக்கிறது.
நிலம் மற்றும் பிற சொத்து உரிமைத்துவ பதிவுருக்கள் மற்றும் ஆவ ணங்கள் அதிக எண்ணிக்கையில் பரவலாக டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படும்போது, சமூகத்தில் அதிக தகுதி யுள்ள பிரிவினரின் இல்ல கதவுகளுக்கு கடன் வசதி சென்றடைவதற்கு டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்படும் திறன் கொண்ட தீர்வுகள் உதவும்.
புதிய மற்றும் இதுவரை வங்கிச்சேவையை முழுமையாக பெறாத சந்தைகளில் நிதி / கடன் வசதி கிடைப்பதை முன் னேற்ற வேண்டுமென்ற பொறுப்புறுதியை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகவும், கௌரவமாகவும் இதனை கருதுகிறோம் என்றார்.