fbpx
Homeபிற செய்திகள்விழிப்புணர்வை ஏற்படுத்த மார்ஸ் பெட்கேர் கருத்தரங்கு

விழிப்புணர்வை ஏற்படுத்த மார்ஸ் பெட்கேர் கருத்தரங்கு

உலகின் முன்னணி செல்லப்பிராணிகள் உணவு நிறுவனமான மார்ஸ் (விகிஸிஷி) பெட் கேர், சென்னையில் கருத் தரங்கை நடத்தியது.

அரசு, கல்வியாளர்கள், என்ஜிஓ பிரதிநிதிகள் மற்றும் தனிப்பட்ட ஆர்வலர்கள் போன்ற பல்வேறு விலங்கு நலப் பங்குதாரர்களை இக்கருத் தரங்கு ஒன்றி ணைத்தது.

செல்லப்பிராணிகளுக் காக சிறந்த நகரங்களை வடிவமைத்தல், தெருவில் திரியும் பிராணிகள் மற்றும் சொந்த செல்லப் பிராணிகளுக்கு தேவை யான, வரவேற் கத்தக்க மற்றும் பராமரிக்கப்படும் சூழலை உருவாக்க வேண் டியதன் அவசியத்தை இந்த கருத்தரங்கு வலியு றுத்தியது.

மார்ஸ் பெட்கேர் சிந்தனைத் தலைமைக் கருத்தரங்குக்கு,சென்னை மாநகராட்சி துணை ஆணையர் டாக்டர் மணீஷ் நர்னாவரே தலைமை வகித்தார். அவர் பேசும்போது, விலங்குகளின் பிரச்ச னைகள் பெரும் பாலான நேரங்களில் கேட்கப்படுவதில்லை.

இது போன்ற முயற்சிகள் சென்னையில் மட்டு மின்றி இந்தியா முழுவ தும் அவற்றின் நிலையை மேம்படுத்த விழிப்புணர்வு மற்றும் உரையாடல்களை உருவாக்கும் என்றார்.

மார்ஸ் பெட்கேர் இந்தியாவின் விற்பனை இயக்குநர் நிதின் ஜெயின் பேசும்போது, செல்லப்பிராணிகளுக் கான சிறந்த உலகத்தை உருவாக்கும் நோக்கத்தில் மார்ஸ் பெட்கேர் இயங்குகிறது.

இன்று நிறுவனங்கள் எவ்வாறு வணிகம் செய்கின்றன என்பதைப் பொறுத்தே நாளை அமையும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img