விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நேற்று கோவையில் நடைபெற்றது.
கோவை சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் அருகில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய மண்டல செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய மண்டல செயலாளர் கே. ரவீந்திரன் முன்னிலை வகித்தார்.
போராட்டத்தில் தமிழ்நாடு கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் என். செல்வராஜ், கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் சி. பத்மநாபன் ஆகியோர் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர் சுதர்சன் கோயம்புத்தூர் லேபர் யூனியன் பொதுச்செயலாளர் பால கிருஷ்ணன் கட்டிட தொழிலாளர் சங்க செயலாளர் விஜயகலா ஏபி மணிபாரதி நந்தகுமார் எஸ் மாணிக்கம் என் கணேசன் கலை அஸ்வினி உள்ளிட்டோரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் குரு ஆகியோரும் கலந்து கொண்டனர்.