டிஜிட்டல் மயமாக்கல் யுகத்தில், இந்தியாவில் வாக னங்கள் வாங்குவோரில் 73%க்கும் அதிகமானோர் தாங்கள் வாங்க விரும்பும் சரியான மாடலை அறிந் துள்ளனர்.
88% பேர் ஆன்லைனில் ஆராய்ச்சி செய் கின்றனர் என்றாலும் ஷோரூமில் தயாரிப்பினைப் பார் வையிடுவது என்பது வாடிக்கையாளர் அனுபவத்தின் முக்கிய உந்துதலாக உள்ளது என்று ஜேடி (JD) பவர், இந்தியா விற்பனை கூறுகிறது.
திருப்தி குறியீட்டு ஆய்வு
திருப்தி குறியீட்டு ஆய்வு (SSI) வெளியிடப்பட்டது. 2021 முதல், ஜேடி பவர் நீல்சென்மினி உடன் இணைந்து இந்தியா விற்பனை திருப்தி அட்டவணை ஆய்வை மீண்டும் வெளியிட்டது.
உடனடித் தகவல் கிடைக்கும் இந்த யுகத்திலும், விற்பனை ஆலோசகர் உடன் கலந்தாலோசித்து தயாரிப்புகளை ஆராய்வதன் முக்கியத்துவம், வாங்குதல் அனுபவத்தைத் தொடர்கிறது என்று நீல்சன் மினிவில் இந்தியாவின் வாகனப் பிரிவின் தலைவர் சந்தீப் பாண்டே கூறினார்.
வாடிக்கையாளர்கள் ஷோரூம்களுக்குத் செல்லும்போது, சீரான தயாரிப்பு அறிதல்கள் திருப்திக்கு உதவும் மற்றும் டீலர் பரிந்துரைகளை ஊக்குவிக்கும் என்றும் கூறினார்.
MG 881 மதிப்பெண்களுடன் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதல் இடத்தில் உள்ளது. டொயோட்டா (878) இரண்டாவது இடத்தில் உள்ளது. ஹூண்டாய் (872) மூன்றாவது இடத்தில் உள்ளது.
2022 இந்திய விற்பனை திருப்தி ஆய்வு (SSI)ஜனவரி முதல் டிசம்பர் 2021 வரை வாகனத்தை வாங்கிய 6,618 புதிய வாகன உரிமையாளர்களின் பதில்களை அடிப்படையாகக் கொண்டது.
இந்த ஆய்வு ஜூன் முதல் செப்டம்பர் 2022 வரை நடத்தப்பட்டது.ஆறு காரணிகளில் (முக்கியத்துவத்தின் வரிசையில் பட்டியலிடப்பட்ட) அவர்களின் திருப்தியை ஆராய்வதன் மூலம், புதிய வாகன உரிமையாளர்களின் விற்பனைச் செயல்பாட்டில் திருப்தியை ஆய்வு அளவிடுகிறது.
டெலிவரி செயல்முறை (20%), டீலர் வசதி (18%), ஆவணங்கள் செயல்பாடு (17%), ஒப்பந்தம் (15%), விற்பனை ஆலோசகர் (15%), பிராண்ட் இணைய தளம் (14%). வெகுஜன சந்தைப் பிரிவில் விற்பனைக்குப் பிந்தைய திருப்தியை மட்டுமே ஆய்வு ஆராய்ந்துள்ளது.
உலகளவில் நுகர்வோர் நடத்தை பற்றிய முழுமையான, பக்கச்சார்பற்ற பார்வையை வழங்குவதில் நீல்சன்மினிமுன்னணியில் உள்ளது.