விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவர் சுமதிராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் முத்துலட்சுமி தர்மலிங்கம் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் 51 தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி கலந்து கொண்டார்.