விருதுநகர் ஸ்ரீவித்யா கல்லூரியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு, மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.
கருத்தரங்கில் மாவட்ட ஆட் சியர் பேசியதாவது: தமிழக அரசு, பாதுகாப்பான சாலைப் பயண த்தை உறுதி செய்யும் வகையில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற் படுத்தி வருகிறது.
ஒட்டுநர் பணி என்பது மிகவும் புனிதமான பணி. நெடுஞ்சாலைகள் மற்றும் வாகனம் என்பது பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள், பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் 2019-ம் ஆண்டு முதல் சாலை விபத்தினால் சுமார் 1.5 இலட்சம் பேர் உயி ரிழந்துள்ளனர். தமிழகத்தில் நடைபெற்ற 57,000 சாலை விபத்தில் சுமார் 10,000 பேர் உயிரிழந்துள்ளனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சாலை விதிகள் என்பது நமது நன்மைக்காக உருவாக்கப்பட்டது என்பதை உணர்ந்து அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வாகனம் ஓட்டுபவர்கள் முழு கவனத்துடன் எந்த பிரச்சனையையும் மனதில் நினைக்காமல், உணர்ச்சி வசப் படாமல் சாலை பாதுகாப்பு விதிமு றைகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும். மது அருந்திவிட்டும், அலைபேசியில் பேசிக்கொண்டும் வாகனத்தினை ஓட்டக் கூடாது.
பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டா லும், அனைவரும் கவனமாக சாலை விதிகளை கடைபிடித்தால் மட்டுமே விபத்தில்லா பயணம் சாத்தியமாகும்.
எதிர்கால இளம் தலைமுறைகளை ஏற்றிச் செல்லும், நீங்கள் அவர்களின் பாதுகாப்பு மற்றும் உங்கள் குடும்ப நலனில் அக்கறை கொண்டு பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும்.
வாகன ஓட்டிகள் தங்கள் உடல்நலத்தில் கவனம் கொள்ள வேண்டும். அதற்கு உதவிடும் வகையில் 6 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைவரும் ஒன்றிணைந்து சாலை விதிகளை முறையாக பின் பற்றினால் மட்டுமே, விபத்துகள் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலும் தவிர்த்து, சிறப்பான சமுதாயத்தையும், விபத்தில்லா மாவட்டத்தையும் உருவாக்க முடி யும் என்றார்.
20 ஆண்டுகளுக்கு மேலாக விபத்தில்லாமல் வாகனம் ஓட்டிய ஓட்டுனர்களை பாராட்டி நினைவு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். வாகன ஓட்டுநர் களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டினை வெளிட்டார்.
கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கு, அரசு மருத்துவமனை மூலம் நடைபெற்ற பொதுநல மருத்துவ பரிசோதனை முகாமினையும், அகர்வால் மற்றும் வாசன் தனியார் மருத்துவமனைகள் மூலம் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமினையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
துணை போக்குவரத்து ஆணையர் (விருதுநகர் சரகம்) ரவிச்சந்திரன், வட்டாரப் போக்கு வரத்து அலுவலர்கள் பாஸ் கரன் (விருதுநகர்), இளங்கோ (ஸ்ரீவில்லிபுத்தூர்), குமாரவேல் (சிவகாசி), மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செல்வராஜ், கார்த் திகேயன், பாத்திமா பர்வின் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர்.