கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் விதைச் சான்று மற்றும் அங்கக சான்று துறையை, கோவை யிலேயே தொடர்ந்து செயல்பட அரசுக்கு உரிய பரிந்துரை செய்ய விவ சாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம், ஆட்சியர் அலு வலக வளாகத்தில் நேற்று (மே 31) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் பட்டா மாறுதல், ஆக்கிர மிப்பு அகற்றுதல், நிலத் தடி நீர் உயர்த்திட நடவடிக்கை, பாலம் கட் டுதல், சாலைகள் சரி செய்தல், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் குறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலன் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் அனைத்தும் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து சிறப்பாகவும் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையிலும் செயல்படுத்தப்பட்டு வரு கிறது.
கொப்பரை கொள் முதல் ஒழுங்குமுறை விற் பனைக் கூடங்கள் வழியாக விரைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்தமைக்கும், புதிதாக அன்னூர் மற்றும் தொண்டாமுத்தூர் ஒழுங் குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக கொப்பரை கொள்முதல் நிலையங்கள் செயல்பட ஆணை வழங்கியதற்கும் மற்றும் பட்டா மாறுதல் தொடர்பாக தமிழ்நாட்டி லேயே முதன் முதலாக கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களுக்கும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு களையும் நன்றியையும் தெரிவித்தனர்.
ஆழியார் ஒட்டன்சத்திரம் நீர்திட்டத் தினை கைவிட அரசுக்கு உரிய பரிந்துரை செய்ய வேண்டி ஆழியார் நீர் பாசன சங்கம் மற்றும் விவசாயிகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட் டது.
மும்முனை மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வும், கொப்பரை கொள் முதல் தொடர்பான தொகை விவசாயிகளுக்கு காலதாமதமின்றி வழங் கவும், கோவையில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் சித்தா மருத்துவமனை அமைக்கவும், கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் விதைச்சான்று ம ற்றும் அங்கக சான்று துறையை, கோவையிலேயே தொடர்ந்து செயல்பட அரசுக்கு உரிய பரிந்துரை செய்யவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
தேவம்பாடி வலசு கிரா மத்தில் தடுப்பு அணைகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் (பயிற்சி) கிருத்திகா, மாவ ட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தமிழ் செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.