உலகின் #1 என்ற அளவில் விற்பனையாகும் இருமல் மற்றும் சளி பிராண்டான விக்ஸ், இன்று இந்தியாவில் விக்ஸ் துளசி இருமல் சொட்டு மருந்துகளை (காஃப் டிராப்ஸ்) அறிமுகப்படுத்தி உள்ளது.
துளசியின் சுவையை அதன் தயாரிப்புகளில் சேர்ப்பதன் மூலம், இந்த பிராண்ட் பாரம்பரிய வைத்தியம் செய்வதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
துளசி செடியானது இருமலுக்கு சிகிச்சையளிப் பதற்கும், தொண்டை வலியை போக்குவதற்கும் மிகவும் பயனுள்ள மூலிகையாக பாரம்பரியமாக அறியப்படுகிறது.
விக்ஸ் இருமல் சொட்டு மருந்துகளால் செய்யப்பட்ட தனிப்பட்ட ஆய்வுகள், தொண்டை வலி நிவாரணத்திற்கு மிகவும் விருப்பமான சுவைகளில் ஒன்றாக துளசியை இந்தியர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இருமலை தணிக்கும் வகையை சேர்ந்த சந்தையில் முன்னணியில் உள்ள விக்ஸ் இருமல் சொட்டு மருந்து போர்ட்ஃபோலியோ ஏற்கனவே தேன், மெந்தால் மற்றும் இஞ்சி போன்ற சுவைகளை கொண்டுள்ளது.
புதிய சுவையான ‘துளசி’ விக்ஸ் இருமல் சொட்டு மருந்துகளின் பாக்கெட் அளவிலான போர்ட்ஃபோலியோவை பலப்படுத்துகிறது. இது தொண்டையில் உள்ள கிச்-கிச்சுக்கு நிவாரணம் அளிக் கிறது.
மூத்த இயக்குநரும், ப்ராக்டர் அன்ட் கேம்பிள் இந்தியா பர்சனல் ஹெல்த்கேர் பிரிவுத் தலைவருமான சாஹில் சேத்தி கூறுகையில், விக்ஸ் இருமல் சொட்டு மருந்து, இயற்கை மற்றும் பாரம்பரிய மூலப்பொருள் அடிப்படையிலான சுவைகளை பயன்படுத்தி, இந்தியர்களுக்கு கிச்-கிச்சில் இருந்து நிவாரணம் அளித்து வருகிறது.
துளசி அதன் மருத்துவ குணங்களுக்காக இந்திய குடும்பங்களில் நம்பகத்தன்மை வாய்ந்த மூலப் பொருளாக உள்ளது.
எனவே, விக்ஸ் இருமல் சொட்டு மருந்து வகையில் புதிதாக துளசியை அறிமுகப்படுத்துவது இயற்கையானது என்றார்.
விக்ஸ் இருமல் சொட்டு மருந்து வறட்டு இருமலை நிறுத்துகிறது, இதமாக்குகிறது மற்றும் தொண்டை எரிச்சலை சரி செய்கிறது.
இருமலை குறைக்கவும், உலகை சிறந்த முறையில் எதிர்கொள்ளும் நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கவும் இது இருமலை தணிக்கும் வகையில் செயல்படுகிறது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக, சிறிய அளவிலான தொண்டை எரிச்சலை நீக்குவதற்கு இது அனைவரின் சிறந்த சுவையான தேர்வாக இருந்து வருகிறது.