fbpx
Homeதலையங்கம்வாய் திறக்காத இபிஎஸ், ஓபிஎஸ்!

வாய் திறக்காத இபிஎஸ், ஓபிஎஸ்!

மறைந்த முதலமைச்சர் ஜெயல லிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. ஜெயலலிதாவுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படாதது முதல் அவருடைய மரண தேதியில் முரண்பாடு இருப்பது வரை பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் அந்த ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

மேலும் தேவைப்பட்டால் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சசிகலா, மருத்துவர் சிவகுமார் ஆகியோரை விசாரிக்கலாம் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைந்துள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரை அருகில் யாரையும் விடாமல் பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டவர் சசிகலா என்பதனால் அவர் மீது பல தரப்பிலும் சந்தேகம் இருந்து வந்தது.

இப்போது ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு விஷயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்ததால் சசிகலாவிற்கு தற்போது சிக்கல் எழுந்துள்ளது.

ஆணையம் சுமத்திய குற்றச்சாட்டுகளை சசிகலா மறுத்திருக்கிறார். ஆனால், அம்மா, புரட்சித் தலைவி என்று ஓயாமல் கூறிவரும் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் இதுவரை இதைப் பற்றி வாய் திறக்கவில்லை.

எந்த ஒரு அறிக்கையும் வெளியிடாமல் இருப்பது, அதிமுக தொண்டர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் உட்கட்சி மோதலுக்கு முக்கி யத்துவம் கொடுக்கும் தலைவர்களுக்கு, இது தெரியவில்லையா? ஏன் இந்த மவுனம்? என அக்கட்சித் தொண்டர்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் மவுனம் சாதிப்பதற்கு என்ன காரணம் என்பதே, அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல தமிழக மக்களின் முன் உறுத்தும் ராட்சத கேள்வியாக நிற்கிறது.

வாய் திறந்து பதில் சொல்வார்களா இருவரும்?

படிக்க வேண்டும்

spot_img