fbpx
Homeபிற செய்திகள்வளர்ச்சிப் பாதையில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ்

வளர்ச்சிப் பாதையில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ்

ஐ.சி.ஐ.சிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், மற்றொரு வலுவான நிதிச் செயல்திறனை வழங்கியுள்ளது.

இது 2021-22 நிதி ஆண்டுக்கான புதிய வணிகத்தின் மதிப்பில் Value of New Business – VNB) ஆண்டுக்கு ஆண்டு 33% வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. லாபத்தின் அளவீடான வி.என்.பி மார்ஜின் 28% ஆக விரிவடைந்தது மற்றும் முழுமையான வி.என்.பி ரூ.2.1.63 பில்லியனாக உள்ளது.

புதிய வணிகக் காப்பீட்டு தொகையில் (New Business Sum Assured) 25% மற்றும் அதே காலகட்டத்தில் வருடாந்திர பிரீமியம் சமமான தொகையில் (Annualised Premium Equivalent – Annualised Premium Equivalent) 20% வலுவான வளர்ச்சியால் இது சாத்தியமாகி உள்ளது.

நிதி ஆண்டு 2021-22-ல், ஆண்டளிப்பு மற்றும் பாதுகாப்பு பாலிசியின் புதிய வணிக பிரீமியங்கள் (Annuity and protection new business premiums) முறையே 29% மற்றும் 35% ஆண்டுக்கு வளர்ச்சி கண்டுள்ளன.

இந்த இரண்டு பிரிவுகளிலும் கணிசமானவர்கள் பாலிசி எடுத்திருப்பதால், அவை வளர்ச்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கி இருக்கின்றன. புதிய வணிகக் காப்பீட்டு தொகையில், 2021-22-ல் ரூ.7,731.46 பில்லியன் ஈட்டி உள்ளதால், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் தனியார் துறை நிறுவனங்களில் முன்னணியில் உள்ளது.

புதுமையான திட்டங்கள் மற்றும் ஆழமான மற்றும் பரந்த இன்சூரன்ஸ் பாலிசி விநியோக வலையமைப்பு போன்ற காரணிகளின் கலவையானது, புதிய வணிக உறுதியளிக்கப்பட்ட தொகையில், சந்தைப் பங்களிப்பில் அதன் முதன்மை நிலையைத் தக்கவைக்க நிறுவனத்திற்கு உதவி உள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி என் எஸ் கண்ணன் கூறும்போது, 2022 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உற்பத்தித்திறனை பாதித்த கோவிட்-19 வைரஸின் மூன்றாவது அலையால் ஏற்பட்ட இடையூறுகள் இருந்தபோதிலும், எங்கள் செயல்பாடுகளால் பின்னடைவை சமாளிக்க முடிந்தது.

2022 மார்ச் மாதத்தில், நிறுவனம் தொடங்கியதிலிருந்து எந்த வருடத்திலும் இல்லாத வகையில் மிகச் சிறந்த மாத விற்பனையை பதிவு செய்துள்ளோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img