கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில் குடிநீர் திட்டப்பணிகள் விரைந்து செயல்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி, குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட தொடர்பு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
அருகில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி, துணை மேயர் வெற்றிசெல்வன் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்.