fbpx
Homeபிற செய்திகள்வரும் 18-ம் தேதி கோவை காருண்யா நகரில் சிறப்பு ஆசீர்வாத பிரார்த்தனைக் கூட்டம்- டாக்டர் பால்...

வரும் 18-ம் தேதி கோவை காருண்யா நகரில் சிறப்பு ஆசீர்வாத பிரார்த்தனைக் கூட்டம்- டாக்டர் பால் தினகரன் நற்செய்தி

கோவையில் இருந்து சிறுவாணி செல்லும் சாலையில் உள்ள காருண்யா நகரில் இயங்கி வரும் பெதஸ்தா சர்வதேச பிரார்த்தனை மையத்தில் வரும் 18-ம் தேதி சிறப்பு ஆசீர்வாத பிரார்த்தனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:
வரும் 18-ம் தேதி பகல் 1.30 மணிக்கு காருண்யா நகரில், பெதஸ்தா பிரார்த் தனை மையம் எதிரில் உள்ள டி.ஜி.எஸ்.தினகரன் கலையரங்கில் இச்சிறப்பு ஆசீர்வாத பிரார்த்தனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இயேசு அழைக்கிறார் நிறுவனரும் காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் பால் தினகரன், இவாஞ்சலின் பால் தினகரன் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு அருளுரை வழங்கி, சிறப்பு பிரார்த்தனை செய்கிறார் கள்.

வாழ்வின் விஷேசித்த தேவைகளுக்காகவும், நல் வாழ்விற்காகவும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்படும். மாணவ, மாணவிகளின் சிறப்பு பாடல்களும் இடம்பெறும். இக்கூட்டத்தில் ஜாதி, மத வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டு, ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொள்கிறார்கள்.

இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வசதியாக, மேட் டுப்பாளையம் -சிவரஞ்சினி தியேட்டர், வழி பிரஸ் காலனி, துடியலூர், பாப்பம்பட்டி வழி கண பதி, சரவணம்பட்டி, வழி கணபதி (இயேசு அழைக் கிறார் பிரார்த்தனை மையம் அருகில்), மதுக் கரை- மரப்பாலம், வழி கிணத்துக்கடவு, (சர்வம் தியேட்டர் அருகில்), கோவைப்புதூர், சித்ரா-பஸ் நிறுத்தம், வழி பீளமேடு (இயேசு அழைக்கிறார் பிரார்த்தனை மையம் அரு கில்), பொங்கலூர்-வழி பெத்தம்பட்டி, கொடுவாய், பல்லடம், பணபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து மதியம் 12 மணிக்கு சிறப்பு பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து காருண்யா நகர் செல்வதற்கும், கூட்ட முடிவில் திரும்பி செல்வதற் கும் பேருந்து வசதிகள் அதிகாலையில் இருந்து இரவு 7 மணி வரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

சிற் றுண்டி சாலைகள், புத்தக சாலைகள் ஆகிய வசதிகள் கூட்ட அரங்கிற்குள் இடம் பெறும். காரண்யா மாண வர் சேர்க்கை பற்றி அறிய ஸ்டால்களும் உண்டு.
இக்கூட்டத்தில் டாக்டர் ஸ்டெல்லா தினகரன், சாமுவேல் பால் தினகரன், டாக்டர் ஷில்பா சாமுவேல், ஸ்டெல்லா ரமோலா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கான ஏற்பாடு களை ஸ்டீபன் பிரபு செய்து வருகிறார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img