fbpx
Homeபிற செய்திகள்லீட் இந்தியாவின் முதல் மாணவர் நம்பிக்கை குறியீடு அறிமுகம்

லீட் இந்தியாவின் முதல் மாணவர் நம்பிக்கை குறியீடு அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்கூல் எட்டெக் நிறுவனமான லீட், ஆத்ம நிர்பர்பாரத்க்கான ஆத்ம-விஸ்வாஸின் பார்வைக்கு ஏற்ப, பிராந்தியங்கள், நகரங்கள், மக்கள் தொகை மற்றும் பல்வேறு அளவுருக்கள் முழுவதும், பள்ளி செல்லும் மாணவர்களின் நம்பிக் கையின் அளவை மதிப்பிடும் ஓர் ஆய்வான, இந்தியாவின் முதல் மாணவர் நம்பிக்கைக்குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட, லீட் இன் இன்டெக்ஸ், மாணவர்களின் நம்பிக்கையைப்பற்றிய பலசக்தி வாய்ந்த நுண்ணறிவுகளை வெளிப்ப டுத்துகிறது.

100 என்ற அளவில், இந்தியா 75 என்ற நம்பிக்கை நிலையில் நிற்கும்போது, 36% மாணவர்கள் உயர்மட்ட நம்பிக்கை நிலைகளை (81-100) குறிப்பிட்டுள்ளனர்.

87 இன் குறியீட்டு மதிப்பெண்ணுடன் ஹைதராபாத் மற்றும் 62 இன் குறியீட்டு மதிப்பெண்ணுடன் அம்பாலா இடையே உள்ள 25-புள்ளி இடைவெளி ஆனது, இந்தி யாவின் பெருநகரங்களில் உள்ள மாண வர்கள், பெருநகரங்கள் அல்லாத தங்கள் சக மாணவர்களைவிட தொடர்ந்து அதிக நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவிக்கிறது.

சுவாரஸ்யமாக, லீட் மாணவர்கள் அனைத்து நம்பிக்கையை வளர்க்கும் பண்புகளிலும் பெருநகரங்கள் அல்லாதவற்றில் தங்கள் சக மாணவர்களை விட சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

லீட் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுமீத் மேத்தா கூறியதாவது: இந்தியா சுயசார்புடையதாக இருக்க, மாணவர்கள் தன்னம்பிக்கை பெற வேண்டும். ஆனால் மாணவர் களின் தன்னம்பிக்கை அளவை அறிய வழி இல்லாமல் இருந்தது.

டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட லீட் இன் மாணவர் நம்பிக்கைக் குறியீடு, இந்த இடைவெளியை நிரப்புகிறது. இது ஒரு வருடாந்திர கணக்கெடுப்பாகும். இது எங்கள் மாணவர்களின் நம்பிக்கையின் அளவைக் கண்காணிக்கவும், எங்கள் கல்வித் திட்டங்கள் மூலம் கவனம் செலுத்தும் தலையீடுகளைச் செய்ய வும் உதவும் என்றார்.

இந்தியாவின் முதல் மாணவர் நம்பிக்கைக் குறியீடு 6-10 வகுப்புகளில் உள்ள 2800+ மாண வர்களை, 6 பெருநகரங்கள், 6 பெருநகரங்கள் அல்லாத மற்றும் 3 அடுக்கு 2/3 நகரங்களில் ஆய்வு செய்தது.

சந்தை ஆராய்ச்சி மற்றும் சர்வே நிறுவனமான பார்டர்லெஸ் அக்சஸ் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img