அமேசான் நிறுவனமானது பெங்க ளூரில் புதிய நுகர்வோர் ரோபோட் டிக்ஸ் மென்பொருள் மேம்பாட்டு மையத்தைத் திறக்கிறது. இந்த தளம் அமேசா னின் நுகர்வோர் ரோபோட்டிக்ஸ் பிரிவை ஆதரிக்க உதவும்.
இது கடந்த ஆண்டு அதன் முதல் ரோபோவான ஆஸ்ட்ரோவை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்ட்ரோ ஒரு புதிய மற்றும் வித்தியாசமான ரோபோ ஆகும்.
இது வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கண் காணிப்பு மற்றும் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பது போன்ற பல் வேறு பணிகளுக்கு உதவும் வகையில் வடிவ மைக்கப்பட்டுள்ளது.
“கடந்த ஆண்டு நாங்கள் எங்கள் முதல் நுகர்வோர் ரோபோவை வெளியிட்டோம். ஆனால் அது நிச்சயமாக எங்கள் கடைசி தயாரிப்பு அல்ல.
இந்த புதிய நுகர் வோர் ரோபாட்டிக்ஸ் மென்பொருள் மேம்பாட்டு மையம், வளர்ந்து வரும் எங்கள் நுகர்வோர் ரோபாட்டிக்ஸ் பிரிவுக்கு ஆதரவளிப்பதற்கும், உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத் தயாரிப் புகளில் பணிபுரிய சிறந்த திறமைகளை ஈர்க்கவும் உதவும்.
இந்தியா ஒரு கண்டு பிடிப்பு மையம்; இங்கு மையம் இருப்பது அமேசான் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நுகர்வோர் ரோபோட்டிக்ஸ் அனுபவங்களை உரு வாக்க உதவும்” என்று அமேசான், நுகர்வோர் ரோபாட்டிக்ஸ் பிரிவின் துணைத்தலைவர் கென் வாஷிங்டன் கூறி னார்.