fbpx
Homeபிற செய்திகள்ரிலையன்ஸ் ஹெல்த் கெயின் அறிமுகம்

ரிலையன்ஸ் ஹெல்த் கெயின் அறிமுகம்

இந்தியாவின் முன்னணி தனியார் பொது காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (RGICL) ரிலையன்ஸ் ஹெல்த் கெயின் எனும் மிகவும் நெகிழ்வான மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகப்படுத்தி உள்ளது.

பிளஸ், பவர், பிரைம் ஆகிய மூன்று வெவ்வேறு திட்டங்களையும், ஒவ்வொரு வாடிக்கையாளரும் தனிப்பயனாக்கும் கொள்கையை எளிதாக்கும் அம்சங்களையும் (RGICL) வெளியிட்டுள்ளது.

அறிமுகம் குறித்து கருத்துத் தெரிவித்த (RGICL) தலைமை நிர்வாக அதிகாரி ராகேஷ் ஜெயின் கூறியதாவது: ரிலையன்ஸ் ஹெல்த் கெயின் பாலிசியின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு ‘பவர் ஆஃப் சாய்ஸ்’ வழங்க விரும்புகிறோம்.

வருங்காலத்துக்கு ஏற்ற “உங்கள் சொந்தக் கொள்கையை உருவாக்குங்கள்” மாதிரி அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் மேம்பட்ட நம்பிக்கையைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது’ என்றார்.

அஸ்பைரர், அஃப்யூலன்ட் அல்லது எலைட் என – சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இப்பாலிசி, 3 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான தொகைக்கு பாலிசி தேர்வுகளை வழங்கி அனைத்து வருமான குழுக்களையும் ஈர்ப்பதாக உள்ளது.

18 வயது முதல் 65 வயது வரை உள்ள வாடிக்கையாளர்களுக்கு, எந்தவொரு காப்பீட்டுத் தொகைக்கும் எந்த அம்சங்களையும் தேர்ந்தெடுக்கும் விருப்பங்களை இது வழங்குகிறது. தவிர, ரூ.3 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகைக்கு பாலிசியில் வயது வரம்பு ஏதும் இல்லை.

எனவே, மருத்துவ பாலிசி இல்லாத மூத்த குடிமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக ஹெல்த் கெயின் பாலிசியைத் தேர்வு செய்யலாம்.

கூடுதலாக, இப் பாலிசி வழங்கும் ஒரு தனித்துவமான அம்சத்துடன் வாடிக்கையாளர் 12 பேர் கொண்ட தந்தை/மாமியார்/மகள் அல்லது மரு மகன், தாத்தா, பாட்டி, பேரக்குழந்தைகள் மற்றும் பல உறவுகள கொண்ட குடும்ப உறுப்பினர்களை இணைக் கலாம்.

50 வயதிற்குட்பட்ட ஆரோக்கியமான வாடிக் கையாளர்களுக்கு வெகுமதி வழங்குதல் போன்ற தனித்துவமான தள்ளுபடிகளை பாலிசி அறி முகப்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஹெல்த் கெயின் பாலிசியை 1, 2 அல்லது 3 வருட பாலிசி காலத்துக்கு, நிறுவனத்தின் 67000 இடைத்தரகர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள 128 கிளை அலுவலகங்களில் வாங்கலாம்.

படிக்க வேண்டும்

spot_img