fbpx
Homeபிற செய்திகள்ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் கலைமகள் விழா

ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் கலைமகள் விழா

நவராத்திரியை முன்னிட்டு பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் கலை மகள் விழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியினை வித்யாலய செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் துவக்கி வைத்தார்.

முதல் நாளான இயல் வழிபாட்டு நிகழ்ச்சியில் வித்யாலய கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.தங்கவேல் அனைவரையும் வரவேற்றார்.

தொடர்ந்து ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் சுவாமி தத்பாஸானந்தர் ஆசியுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உபன்யாசகர் தியாகராஜ ஷர்மா மாணவர்களிடையே ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.
தொடர்ந்து இரண்டாம் நாள் இசை வழிபாட்டு நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய மாருதி உடற்கல்வி முதல்வர் விஎஸ்டி சாய்குமார் வரவேற்புரை வழங்கினார்.

தி.அ.தி. காலநிலையம் பள்ளி செயலர் சுவாமி ஹரிவ்ரதானந்தர் ஆசியுரை வழங்கினார். தொடர்ந்து வித்யாலயா பாகவதர்கள் குழு, ஆன்மிக இசை நிகழ்ச் சியினை வழங்கினார்.

மூன்றாவது நாளான நேற்று நாடகம் மற்றும் நடன வழிபாட்டில், கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து சுவாமி புத்திதானந்தர் ஆசியுரை வழங்கினார்.

வித்யால யாவின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் நடன மற்றும் நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விநாயகர் நடனம், வேலுநாச்சியார் நாடகம், தேவி லலிதா பரமேஸ்வரி நாட்டிய நாடகம், சூரஸம்ஹாரம், திருமால் பெருமை நாட்டிய நாடகம், முருகன் காவடி ஆட்டம், போன்ற நடன நாடக நிகழ்ச்சிகள் மாணவர்களால் நடத்தப்பட்டது.

இறுதியாக சுவாமி விவேகானந்தர் பண்பாடு மற்றும் பாரம்பரிய மையத்தின் இயக்குனர் முனைவர் எஸ் அழகேசன் நிறைவுரை வழங்கினார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் மேற்கொண்டார்.

வித்யாலய நிறுவனத்தின் சுவாமிஜிக்கள், பிரம்மசாரிக்கள், பல்வேறு நிறுவனங்களின் முதல்வர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பக்தர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img