fbpx
Homeபிற செய்திகள்மேக்ஸ்வெல் சாரிட்டபிள் டிரஸ்ட் துவக்க விழா

மேக்ஸ்வெல் சாரிட்டபிள் டிரஸ்ட் துவக்க விழா

அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு உதவிகள் செய்யவும் ஆதரவின்றி தவிக்கும் பெண்களுக்கு தொழில் தொடங்குவதற்கு தேவையான பயிற்சியும் அந்த தொழிலை தொடங் குவதற்கான முன் கட் டமைப்பு பணிகளைச் செய்து தரும் வகையில் முனைவர் மா.முருகன் தலைமையில் அறக்கட்டளை துவங்கப்பட்டது.

இந்த விழாவில் யுனைடெட் கல்வி குழும தலைவர் சண்முகம், நிழல் மையம் நிறுவனர் முரு கன் மற்றும் FAIRA North president சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளர்கள் அறக்கட்டளையின் செயல்பாடுகளுக்கு உறு துணையாக நிற்பதாகவும் அறக்கட்டளை மூலமாக ஆயிரக்கணக்கான நபர்கள் பயன்பெற வேண்டும் எனவும் வாழ்த்து தெரிவித்தனர்.

விழாவில் தலைவர் முனைவர் முருகன் கூறு கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகள் தரும் நிலையில் மேலும் தேவைப்படும் அனைத்தையும் தாங்களும் தருவதாக உறுதி அளித்தார்.

மேலும் ஆதரவற்ற பெண்களுக்கு தொழில் தொடங்குவதற்கான கட்ட மைப்பு சேவைகள் செய்ய இருப்பதாகவும் கூறினார்.

விழாவின் இறுதியில் முதியவர்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டது.

குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், ஸ்கூல் பேக்குகள், முதியோர்களுக்கு அரிசி உட்பட 11 மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

தொழில் தொடங்குவதற்கு தேவையான ஐந்து பெண் களுக்கு தையல் மெஷின் வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img