சூலூரை உலுக்கிய மூதாட்டி கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்டு துப்புத் துலக்கி ஒரே வாரத்தில் மூன்று குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையை பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் பி.எஸ்.செல்வராஜ் தலைமையில் கிராம மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் காந்திநகர் பகுதியில் சரோஜினி என்ற மூதாட்டி நான்கு பவுன் நகைக்காக பிளாஸ்திரியால் கை கால்கள் சுற்றப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒரே வாரத்தில் துப்பு துலக்கி குற்றவாளிகளை சூலூர் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
இதில் சிறப்பாக செயல்பட்ட கருமத்தம்பட்டி உட்கோட்ட கண் காணிப்பாளர் ஆனந்த் ஆரோக் கியராஜ், சூலூர் காவல்துறை ஆய்வாளர் மாதையன், உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திர பிரசாத், கார்த்திக்குமார், கருமத்தம்பட்டி உதவி ஆய்வாளர் உதயச்சந்திரன், மற்றும் தனிப்படை போலீசாரை ஊர் பொதுமக்கள் மற்றும் மூதாட்டியின் மகன்கள் மற்றும் குடும்பத்தினர் நேரில் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் முதலமைச்சர் ஸ்டா லின் தலைமையில் இயங்கி வரும் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்து வருவ தாகவும் குற்றம் செய்யப் பட்டவர்கள் தண்டனை விரைவாக கிடைத்து வருவதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்தனர்.
நிகழ்வில் கவுன்சிலர் கபிலன், அதிமுக குணா, சமூக ஆர்வலர் ராதாமணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.