fbpx
Homeபிற செய்திகள்முன்னேறிய தொழில்நுட்பத்தால் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுங்கள்- கோவை டாக்டர் ரூபா...

முன்னேறிய தொழில்நுட்பத்தால் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுங்கள்- கோவை டாக்டர் ரூபா அறிவுறுத்தல்

இந்தியாவில் புற்றுநோயா ளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரு கிறது, அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது அதி கரித்து வருகிறது. இதில் குறிப்பாக 30 வயது முதல் 50 வயது பிரிவிலான பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது கவலையளிப்பதாக உள்ளது.

இது குறித்து கோவை மருத்துவ மையம் அண்ட் மருத்துவமனை, முதுநிலை ஆலோசகர் டாக்டர் ரூபா ரெங்கநாதன் கூறியதாவது:
மார்பக புற்றுநோய் பரிசோதனை என்பது ஒரு பெண்ணின் மார்பகத்தில் புற்று நோய் வருவதற்கு முன்பாக அதற்குரிய அறி குறி மற்றும் அறிகுறிகள் ஏற்படுத்தாத சிறிய கட்டிகள் இருப்பதை சோதித்து அறிவதாகும்.

மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்வது புற்றுநோய் வருவதை தடுக்காது. ஆனால் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும். அதன்மூலம் முன் கூட்டியே சிகிச்சையைத் தொடங்க எளிதாக இருக்கும்.

வழக்கமாக மேற்கொள்ள வேண்டிய மேமோகிராம் பரிசோதனையை 40 வய துக்கு மேற்பட்டவர்கள் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் உரிய நேரத்தில் நோயைக் கண்டறிந்து, மார் பகத்தில் ஏற்பட்ட வளர் சிதை மாற்றங்கள் மற் றும் கட்டிகளை கண்ட றிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

வாக்குவம்-அசிஸ்டெட் பிரெஸ்ட் பயாப்சி (விஏபிபி) தொழில்நுட்பமானது, மார்பகப் புற்றுநோயை மிகவும் துல்லியமாகக் கண்டறிய உதவுகிறது.
வழக்கமான ஊசி மூலமாக துளைத்து மேற் கொள்ளப்படும் சோத னைகளில் சிறிய கட்டிகள் சில சமயங்களில் தெரியாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது.

பொதுவாக பெண்களின் மார்பகப் பகுதியில் கட்டி அல்லது வீக்கம் ஏற்படுவது கவலையளிப்பதான விஷய மாகும். அனைத்து கட்டிகளும் புற்றுநோய் கட்டிகளாக இருந்து விடுவதில்லை.

இளம் வயது பெண்களுக்கு ஏற்படும் கட்டிகள் பைபரோ டெனோமாஸ் எனப்படுகிறது. வழக்கமாக இதுபோன்ற கட் டிகள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்படுகின்றன.

விஏபிபி தொழில்நுட்பம் மூலம் இதுபோன்ற புற்று நோய் அல்லாத கட்டிகளை தழும்பு இல்லாமல் நீக்க முடியும். ஒரே நாளில் சிகிச்சை பெற்று திரும்பவும் முடியும் என்றார்.

விஏபிபி எனப்படும் முன்னேறிய தொழில்நுட்பம் வெளிநாடுகளில் அதிகமாகப் பின்பற்றப்படுகிறது. இத் தகைய தொழில்நுட்பம் இப்போது இந்தியாவிலும் பர வலாக பின்பற்றப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img