மதுரை நேரு வித்யாசாலை ஆரம்பப்பள்ளியில் 1973-&1981 வரை படித்த மாணவர்களில் 58 பேர் ஏறக் குறைய 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 29-ம் தேதி சந்தித்தனர்.
பலர் போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளாகவும், சுய தொழில்புரிபவர்களாகவும், நிறுவனங்கள் நடத்துப வர்களாகவும் உள்ளனர்.
பழைய நினைவுகளை நண்பர்கள் பரிமாறிக் கொண்டு மீண்டும் தங்களுடைய நட்பைப் புதுப்பித்துக் கொண்டனர்.
மிகச்சரியாக 14,975 நாட்களுக்குப் பிறகு நண்பர்கள் மீண்டும் சந்தித்துக் கொண்டது மிக்க மகிழ்ச்சியாய் அமைந்ததாக தெரிவித்தனர்.