fbpx
Homeபிற செய்திகள்முதுகுளத்தூர் வட்டாரத்தில் வேளாண் திட்டப் பணிகள்: சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க ரூ.190.74 லட்சம் இலக்கு-செய்தியாளர்களுடன் மாவட்ட...

முதுகுளத்தூர் வட்டாரத்தில் வேளாண் திட்டப் பணிகள்: சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க ரூ.190.74 லட்சம் இலக்கு-செய்தியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்

ராமநாதபுரம் மாவட் டம் செய்தியாளர்கள் பயணத் தின்போது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் பார்¬ வயிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் முது குளத்தூர் வட்டாரம் செல்லூர் கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் பண்ணை குட்டை மற்றும் பரப்பு விரிவாக்க இனத்தில் பப்பாளி,முருங்கைச் செடிகள் பயிர் செய்து பயன் அடைந்த சேசுஅருள் என்பவரது வயல்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

அங்கு பண்ணை குட்டைக்கு 50% மானியமாக 52,500/- வழங்கப்பட்டுள்ளது.
இதன் நீளம் 20 மீட்டர் அகலம் 20 மீட்டர் ஆழம் 3 மீட்டர் ஆகும். பரப்பு விரிவாக்க இனத்தில் பப்பாளிக்கு 1 ஹெக்டர் ரூ.23,100/ மற்றும் முருங்கைக்கு 1 ஹெக்டர் ரூ.10,000/- மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் அறுவ டைக்குப் பின் நேர்த்தி இனத்தில் சிப்பம் கட்டும் அறை நல்லூர் கிராமத்தை சேர்ந்த போஸ்-க்கு 50% மானியமாக ரூ.2,00,000/- வழங்கப்பட்டுள்ளது.

சிப்பம் கட்டும் அறையில் மிளகாய் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.
கமுதி வட்டாரம் வல்லந்தை கிராமத்தில் தேசிய நீடித்த நிலை யான வேளாண்மை இயக்கம் ஒருங்கிணைந்த பண்ணையம் திட் டத்தின்கீழ் பயனடைந்த விவசாயி கிருஷ்ணன் நிலத்தையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

இத்திட்டத்தின்கீழ் பயனா ளிக்கு மாடு வளர்ப்பிற்காக ரூ.15,000/- ஆடு வளர்ப்பிற்காக ரூ.7,500/- மற்றும் தோட்டக்கலை பயிர்களான மா மற்றும் தட் டைப்பயிருக்கு முறையே ரூ.20,500/- மற்றும் ரூ.2,000/- என மொத்தமாக ரூ.45,000/- மானியம் வழங்கப்பட்டுள்ளது.

2021-22ம் நிதியாண்டில் நீடித்த நிலையான பருத்தி சாகு படி இயக்கத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஊடுபயிர் செய்வதற்கு உளுந்து விதை,பருத்தி நுண்ணூட்டம், இயற்கை உரம், வேப்பம் புண்ணாக்கு மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி செயல்விளக்கத்திடல் அமைக்க ரூ.56.37 லட்சம் இலக்கு பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பரமக்குடி வட்டாரம் அறியனேந்தல் கிராமத்தை சேர்ந்த கார்மேகம் தீவிரப்பருத்தி சாகுபடி இயக்கதின் சார்பில் சால் அமைத்து பருந்தி நடவு செய்த செயல் விளக்கதிடலினையும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டில் 1038 எக்டர் பரப்பில் பருத்தி, தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க ரூ.190.74 லட்சம் இலக்கு பெறப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பரமக்குடி வட்டாரம் மேலபெருங்கரை கிராமத்தில் நுண்ணீர் பாசன செயல் விளக்க திடலினையும் செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத், பார்வையிட்டார்.

இச்செய்தியாளர் பயணத்தின் போது வேளாண்மை துறை இணை இயக்குநர் டாம் பி சைலஸ் தோட்ட கலைத்துறை துணை இயக்குநர் நாகராஜன், செய்தி மக்கள்தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன் பாண்டியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) வா.பெ.வினோத் உள் ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img