fbpx
Homeபிற செய்திகள்முதியவருக்கு தகுந்த நேரத்தில் சிகிச்சை இந்துஸ்தான் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

முதியவருக்கு தகுந்த நேரத்தில் சிகிச்சை இந்துஸ்தான் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

ஆக்ஸிஜன் குறைவால் மூச்சுவிட மிகவும் சிரமப்பட்ட முதியவரை தகுந்த சிகிச்சை அளித்து இந்துஸ்தான் மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றி உள்ள னர்.

கோவிட் தொற்றில் இருந்து குணம டைந்த முதியவர் மூச்சுவிட முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டார். கோவிட் தொற்றால் இவரது நுரையீ ரல் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது. முதியவரை, இந்துஸ்தான் மருத்துவ மனைக்கு அழைத்து வந்தனர்.

சரியாக மூச்சுவிட முடியாமல், பேச முடியாமல் இருந்த அவரை சோதித்த போது, ரத்த அழுத்தம் மிக அதிகமாக இருந்தது. நுரையீரலுக்குள் தண்ணீர் நிரம்பி இருந்தது. ஆக்ஸிஜன் அளவு வெறும் 48 சதவீதம் (இயல்பு நிலை 98 முதல் 100 சதவீதம்) தான் இருந்தது.

அவருக்கு உடனடியாக சிகிச்சை துவங்கியது. அவரை சிபாகா ஐசியூ (Cipaca ICU) கொண்டு சென்று வென்டிலேட்டர் உதவியுடன் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரது ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்கு வந்தவுடன் வென்டிலேட்டர் உதவி இல்லாமல் சுவாசிக்கும் அளவுக்கு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவரது ஆக்ஸிஜன் அளவு 94 சதவீதத்துக்கு மேல் வந்ததால் நலமுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்துஸ்தான் மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் சதீஷ், சிபாகா ஐசியூ தலைவர் டாக்டர் மணீஷ், சிபாகா ஐசியூ பொறுப்பாளர் மற்றும் மூத்த ஆலோசகர் டாக்டர் சரண்யா ஆகியோர், மூச்சு விட போராடிக் கொண்டிருந்த முதியவரை தகுந்த சிகிச்சையின் மூலம் குணமடையச் செய்து காப்பாற்றினர்.

படிக்க வேண்டும்

spot_img