ராமநாதபுரம் மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டில், மாநில அரசின் திட்டத்தின் கீழ் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு 1,374 உட்பொருத்தும் / வெளிபொருத்தும் இயந்திரங்கள் ரூ.4.80 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.
2021-22-ம் ஆண்டிற்கு, இத்திட்டத்தின் கீழ் ரூ.24 கோடி திட்ட மதிப்பீட்டில் இயந்திரங்களை வழங்கிட, நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு ரூ.9.71 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கியும் அரசு ஆணை வழங்கியுள்ளது.
மீன் ஓர் ஊட்டச்சத்து நிறைந்த புரத உணவு ஆகும். இது வளர்ந்து வரும் மக்கள் தொகையின் புரதத் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தமிழகத்தின் மீன்வள ஆதாரங்களாக உள்ள கடல்கள், கழிமுகங்கள், ஆறுகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள் மற்றும் குளங்கள் போன்றவை மாநிலத்தின் ஒட்டுமொத்த மீன் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான மகத்தான வாய்ப்பை வழங்குகின்றன.
மீன்வளப் பிரிவானது கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.
மீன் அதன் ஊட்டச்சத்து மற்றும் சுவைக்காக பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்பிரிவின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, மீன்வளத்தை பாதுகாத்தல் நிலையான மீன்பிடிப்பு மற்றும் மீன்வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு புதுமையான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
மீன்பிடி படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன் பிடிக்கும் இடத்திலிருந்து அதன் நுகர்வு வரை சுகாதாரமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதற்கும், மீன்பிடித் துறைமுகங்கள், மீன் சந்தைகள் போன்ற நவீன உட்கட்டமைப்பு வசதிகளை அரசு உருவாக்கி உள்ளது.
நவீன சாதனங்கள்
மீன்பிடிப்பு தடைக்காலம் மற்றும் மீன்பிடிப்பு கரைவு காலங்களில் கடல் மீனவர்களின் சிரமங்களை போக்கவும், அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட, தடையற்ற தகவல் தொடர்பு அமைப்பை இத்துறை நிறுவியுள்ளதுடன், செயற்கைக்கோள் தொலைபேசிகள் உயர் அதிர்வெண் தொலைத்தொடர்பு கருவிகள் டிரான்ஸ்பாண்டர்கள் போன்ற நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடற்பாசி வளர்ப்பு மற்றும் கடல் கூண்டுகளில் மீன்வளர்ப்பு போன்ற மீனவர்களுக்கான மாற்று வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நீடித்த முறையிலான ஆழ்கடல் மீன்பிடிப்பினை மேம்படுத்தும் வகையில் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துகிறது.
மாநிலத்தின் உள்நாடு மீன் உற்பத்தியை அதிகரித்திட, அனைத்து நீர்நிலைகளிலும், தரமான மீன் குஞ்சுகள் இருப்பு வைத்து மீன்வளர்ப்பு மேற்கொள்ளும் வகையில், உள்நாட்டு மீன் குஞ்சு உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் இடையே உள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்திட தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
தொலைநோக்கு திட்டங்கள்
மீன் வளர்ப்போரை சென்றடையச் செய்திட, நீர் மறுசுழற்சிமுறை மீன் வளர்ப்பு மற்றும் உயிர்க் கூழ்ம முறை மீன் வளர்ப்பு போன்ற திட்டங்களுக்கு மானியம் வழங்கி ஊக்குவிக்கப்படுகின்றன.
2/4 தமிழகத்திலிருந்து கடல் உணவுப் பொருள் ஏற்றுமதியை இரட்டிப்பாக்கிட, உவர் நீர் மீன் வளர்ப்பை பெருமளவில் விரிவுபடுத்திடவும், அதே நேரத்தில் கடலோரப் பகுதிகளில் உள்ள விவசாயத்திற்கு பயன்படாத நிலங்களை கண்டறிந்து, இதற்காக பயன்படுத்தவும் அரசு தெளிவான தொலைநோக்குத் திட்டங்களைக் கொண்டுள்ளது.
மீன் பதனிடுதல் மற்றும் ஏற்றுமதிக்கு தேவையான தொடர் குளிர்காப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
பாரம்பரிய மீன்பிடி கலன்களை இயந்திரமயமாக்குதல்:
மீனவர்கள் வெளிப்பொருத்தும் இயந்திரம் / உட்பொருந்தும் ஓர் அலகிற்கான விலையில் 40 விழுக்காடு அல்லது ரூ.48,000, இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படுகிறது.
2021-22-ம் ஆண்டில், மாநில அரசின் திட்டத்தின் கீழ் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு 1,374 உட்பொருத்தும் / வெளிபொருத்தும் இயந்திரங்கள் ரூ.4.80 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.
2021-22- ஆண்டிற்கு, இத்திட்டத்தின் கீழ் ரூ.24 கோடி திட்ட மதிப்பீட்டில் இயந்திரங்களை வழங்கிட, நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு ரூ.9.71 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கியும் அரசு ஆணை வழங்கியுள்ளது.
வாழ்வாதாரம் காக்க
இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு மீட்க இயலாத நிலையில் உள்ள படகுகளுக்கு நிவாரணம்:
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு மீட்க இயலாத நிலையில் இலங்கையின் பல்வேறு கடற்படை தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளின் உரிமையாளர்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை காத்திடும் பொருட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த 52 விசைப் படகுகளுக்கு தலா ரூபாய் 5 இலட்சம் வீதம் ரூ.260 இலட்சமும் மற்றும் 5 நாட்டுப்படகுகளுக்கு தலா ரூ.1.50 இலட்சம் வீதம் ரூபாய் 7.50 இலட்சமும் என மொத்தம் 57 படகு உரிமையாளர்களுக்கு ரூபாய் 267.50 இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசால் சிறைபிடிக் கப்பட்டு வைக்கப்பட்டுள்ள 125 படகுகளில் 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 இலட்சமும், 14 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.5.66 கோடி வழங்கப்படும் என முதல்வர் 21.01.2022 அன்று அறிவித்ததன் அடிப்படையில், 122 படகுகளுக்கு நிவாரணமாக மொத்தம் ரூ.5.61 கோடி வழங்க ஆணை வெளியிடப்பட்டு அதற்கான நிவாரணம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாட்டுப்படகில் மீன்பிடிப்பை அதிகரிக்கும் பொருட்டு, 15 நாட்டுப்படகு மீனவர்களுக்கு ரூ.5.63 இலட்சம் மதிப்பீட்டில் உட்பொருத்தும், வெளி ப்பொருத்தும் இயந்திரங்களையும், பருவமழைக் காலத்தில் இயற்கை சீற்றத்தினால் 3, சேதமடைந்த 2 விசைப்படகுகளுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ.5.65 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டுள்ளது.
ஊக்குவித்த முதல்வர்
இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிராமத்தை சார்ந்த கந்தன் கூறியதாவது:
நான் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். நாட்டு படகின் மூலம் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் முதல்வர், மீனவர்களுக்கு உட்பொருந்தும் மற்றும் வெளிப்பொருந்தும் இயந்திரங்களை மானிய விலையில் வழங்க உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, எனது நாட்டு படகிற்கு உட்பொருந்தும் இயந்திரங்களை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வழங்கியுள்ளனர்.
என்னை போன்று நாட்டுப் படகு மீனவர்களுக்கு இது போன்று இயந்திரங்களை வழங்கி மீன் பிடி தொழிலை ஊக்குவிக்கும் தமிழக அரசுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தொகுப்பு:
சே.ரா.நவீன்பாண்டியன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
இராமநாதபுரம்.
வா.பெ.வினோத்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
இராமநாதபுரம்.