கிராம்ப்டன் க்ரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட், அதன் சமீபத்திய ஆற்றல் திறன் கொண்ட சீலிங் மின்விசிறி வரம்பு – எனெர்ஜியான் க்ரூவ் அறிமுகம் செய்துள்ளது.
ஆற்றல் செயல்திறனில் மிகவும் அனுபவம் வாய்ந்த பிராண்டு களில் ஒன்றாக இருப்பதுடன், தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதை தொடர்ச்சியாக 6 முறை வென்றுள்ள கிராம்ப்டன் 80 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை முழுமையான ஆயுள் மற்றும் தர உத்தர வாதத்துடன் பெற்றுள்ளது.
இதன் புத்தம் புதிய 5 நட்சத்திர தரம் பெற்ற மின்விசிறிகள் தொகுப்பானது ஆக்டிவ் BLDC மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது – 220CMM காற்று விநியோகம், 28W vs 70W மின் நுகர்வு, 60% வரை சேமிப்பு, வழக்கமான இன்டக்ஷன் மின்விசிறியுடன் ஒப்பிடும்போது, ஆண்டுதோறும் மின்சாரக் கட்டணமாக (4 மின்விசிறிகளுக்கு) ரூ.7000 மிச்சப்படுத்துகிறது.
எரிசக்தி-திறனுள்ள வீட்டுத் தீர்வுகளை கண்டுபிடிப்பதில் கிராம்ப்டனின் தொடர்ச்சி யான முயற்சிகள் குறித்து, கிராம்ப்டன் க்ரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் அப்ளையன்ஸ் பிசினஸ் – துணைத் தலைவர் சச்சின் பார்தியால் கூறுகையில், “ஒவ்ª வாரு வீட்டின் மையமாகவும் சொகுசு மற்றும் வசதியை உறுதி செய்வதை கிராம்ப்டன் தொடர்ந்து நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார்.
ஸ்மார்ட் ரெகுலேட்டர் மாடல் (மட்டும்): இந்த விசிறி இன்டஜலின்ட் மிஷின் லேர்னிங் திறன்களுடன் சந்தையில் கிடைக்கும் மாடல்களுக்கு இடையே உள்ள மாறுபாடுகள் இருந்தபோதிலும், வீடுகளில் பயன்படுத்தப்படும் 1200 மிமீ ஸ்வீப், மின்தேக்கி வகை ஸ்டெப் ரெகுலேட்டருடனும் இது வேலை செய்கிறது.
பல தரப்பட்ட வடிவமைப்புகள்: நவீன உட்புற அலங்காரத்தை நிறைவு செய்யும் நேர்த்தியான மற்றும் நவநாகரீக பிளேடுகளுடன் கூடிய நவீன மினியேச்சர் வடிவமைப்பு. தூசி-எதிர்ப்பு (தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில்) – விசிறி பிளேடுகளில் தூசி சேர்வதை 50% குறைக்கிறது. 5 ஆண்டு உத்தரவாதம்: ஆக்டிவ் BLDC மோட்டார் இது மிகவும் நம்பகமானது.