fbpx
Homeபிற செய்திகள்மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை: மக்கள் தான் எஜமானர்கள்; மறந்துவிடாதீர்

மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை: மக்கள் தான் எஜமானர்கள்; மறந்துவிடாதீர்

மக்கள் தான் நமக்கு எஜமானர்கள், அரசின் நலத்திட்டப்பலன்கள் கடைக்கோடி மக்களுக்கும் போய் சேர வேண்டும் என்பதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியர் கள், காவல்துறை அதி காரிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை மற்றும் வனத் துறை அலுவலர்கள் மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் களுக்கான மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

தொடக்கத்திலே நம் முடைய தலைமைச் செயலாளர் அவர்கள் விளக்கமாக, விரிவாக இந்தக் கூட்டத்தினுடைய நோக்கத்தைப் பற்றி, இதில் எப்படி உங்களுடைய கருத்துக்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதைப் பற்றியும், நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் இங்கே விளக்கமாக, விரிவாக எடுத்து வைத்திருக்கிறார்கள்.

எனவே, நான் அது குறித்து அதிகம் உங்களி டத்திலே பேச வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும், தொடக்க உரையாக, சுருக்க உரையாக என்னுடைய உணர்வை உங்களிடத்தில் நான் வெளிப்படுத்த விரும்புகிறேன்.

மாவட்ட ஆட்சித்தலை வர் கள், தங்களுடைய மாவட்டங்களில் நிறைவேற் றப்படக்கூடிய திட்டங்கள் குறித்து, கள நிலவரத்தை விரிவாக நீங்கள் இங்கே எடுத்துரைக்கலாம்.

இந்த அரசினுடைய திட்டங் களின் பயன் மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வது குறித்து அனைவரும் தங்களுடைய கருத்துக்களில் அதை இணைத்து தெரிவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களுக்கும், உங்க ளுக்கும் அதாவது, எங்களைப் போன்ற அரசியல்வாதிகளுக்கும், உங்களைப் போன்ற அதிகாரிகளுக்கும் மக்கள் தான் எஜமானர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

ஆகவே, ஒரு ரூபாய் செலவு செய்தால் கூட, அந்த ஒரு ரூபாய் சிந்தாமல், சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அதுதான் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத் துக்காட்டாக அமைந்திட முடியும்.

ஒவ்வொரு மாவட் டத்திலும் நிறைவேற்றப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் இருந்தால், நீங்கள் இங்கே கூறலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான பொருட்கள் கிடைக்கிறது. அது மஞ்சளாக இருக்கலாம், இயற்கை வளங்கள் அதிகமாக இருக்கலாம்.

அவற்றை எப்படி மார்க்கெட் செய்வது, அதிலிருந்து எப்படி அரசிற்கு வருமானத்தைப் பெருக்குவது என்பது குறித்தும், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில், பெருந்தொழில் உள்ளிட்ட அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய திட் டங்கள் என்னென்ன என்பது குறித்த கருத்துக் களையெல்லாம் நீங்கள் இங்கே தெரிவிக்கலாம் எனக் கேட்டு, நேர்மையான நிர்வாகம், வெளிப்படையான நிர்வாகம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, உங்களுடைய ஆலோ சனைகளை சுதந்திரமாக நீங்கள் கூறலாம் என்று கேட்டு, அந்த வகையில் உங்களுடைய கருத்துக் களைக் கேட்பதற்கு நான் ஆர்வமாக இருக்கிறேன் என்பதை மட்டும் இங்கே எடுத்துச் சொல்லி, என்னு டைய தொடக்க உரையை இதோடு முடித்துக் கொள் கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img