fbpx
Homeபிற செய்திகள்மாணவர்கள் நடத்தையை கண்காணிக்க ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

மாணவர்கள் நடத்தையை கண்காணிக்க ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

மாணவர்களின் நடத்தையில் மாற்றம் இருந்தால், கண்காணித்து, பிரச்சனைகளைக் கண்டறிந்து ஆசிரியர்கள் கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டார்.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ஒருங்கிணைந்த கல் வித் திட்டத்தின் கீழ் பள்ளிக் கல்வித்துறை மூலம் செயல்பட்டு வரும் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியில் நேற்று (அக்.26) பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் யாமொழி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் யாமொழி தெரிவித்ததாவது: ஒண்டிப்புதூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியில் ஆய்வு செய்யப்பட்டது.

அப்பள்ளியின் சமையலறை, மாணவர்கள் தங்கும் அறை, எண்ணும் எழுத்தும் திட்ட அறை, கல்வி பயிலும் அறை, கணினிஅறை மற்றும் கழிப்பறை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடி, மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறியப்பட்டது.

ஆசிரியர்கள் என்பவர்கள் வருங்கால சமுதாயத்தை கட்டமைக்க கூடியவர்கள், மாணவர்களின் நலன்காக்கும் திட்டங்கள் தொடர்பாக, ஆசிரியர்களின் ஆக்கப்பூர்வமான கருத்துகளை கேட்டறிந்து செயல்படுத்துவதற்காகத் தான் அவர்களிடம் கருத்துகள் கேட்கப் படுகின்றன.

ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் நடத்தும்போது, மாணவர்கள் பாடத்தை முழுமையாக கவனிக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். ஏதா வது ஒரு சில மாணவர்கள் பாடத்தை கவனிக்காமல் இருந்து, நடத்தையில் மாற்றம் இருந்தால், அவர்களை பற்றி அவர்களின் பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

என்னவிதமான பிரச் சனை என்பதை கண்டறிந்து, அவர்களின் மனஅழுத்தத்தை போக்கும்வகையில் கவுன்சிலிங் வழங்க வேண்டும். சுத்தம், சுகாதாரம், கண்காணிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளும் பள் ளியில் உள்ள பிற அலுவலகப் பணியாளர்களும், மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ள வேண் டும்.

தமிழ்நாட்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்பு திறன், அடிப்படை கணித திறனை மேம்படுத்தும் இந்த திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தொடர்ந்து, ஓண்டிப்புதூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், முதன்மைக் கல்வி அலுவலர் இரா.பூபதி, ஒருங்கிணைப்பாளர் சுதாகர் பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img