fbpx
Homeபிற செய்திகள்மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுக்கு பரிசு- கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுக்கு பரிசு- கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட் டத்துடன் பிரதம மந்திரி மக் கள் ஆரோக்கியத் திட்டம் இணைந்து செயல்படுத்தப்பட்டு, நான்கு ஆண்டுகள் நிறைவடைந் ததையொட்டி, காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்த 9 பயனாளிகளுக்கு (செப்.23) மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பரிசுகளை வழங்கினார்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் முத்தமிழறிஞர் டாக்டர் கலை ஞரால் 23.07.2009 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டம் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்துடன் ஒருங்கிணைந்து 23.09.2018 முதல் சிறந்த முறை யில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் திட்ட பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் முதல மைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் மூலம் 15 அரசு மருத்துவமனைகள் மற்றும் 99 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் கடந்த ஒரு வருடத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 32,577 பயனாளிகளுக்கு ரூ.77.52 கோடி சிகிச்சைக்காக வழங்கப்பட் டுள்ளது. 6,12,890 குடும்பங்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

ரூ.1,20,000/-மற்றும் அதற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் பயனடையலாம். முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை தேவைப்படுவோர் குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்ற ஆண்டு வருமானச் சான்று (ரூ.1,20,000/-மற்றும் அதற்கு குறைவான) ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்படும் மையத்தை அணுகி இணை யதளத்தில் பதிவு செய்து காப்பீட்டு அட்டை பெற்றுக்கொள்வது குறித்து விழிப்புணர்வு பணிகளும் மாவட்டம் முழுவதும் மேற்கொள் ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த 3 காப்பீட்டு திட்ட தொடர்பு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும், 5 பயனாளி களுக்கு முதலமைச்சரின் மருத் துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை களையும் வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், இணை இயக்குநர் (மருத்துவம் மற் றும் ஊரக நலப்பணிகள்), மரு.சந்திரா, மாவட்ட காப் பீட்டுத் திட்ட அலுவலர் பாண்டியராஜன், காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் மரு.வெங்க டேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img