fbpx
Homeபிற செய்திகள்மரபு சாரா எரிசக்தியில் ஜவுளித்துறை கவனம் செலுத்த சைமா வலியுறுத்தல்

மரபு சாரா எரிசக்தியில் ஜவுளித்துறை கவனம் செலுத்த சைமா வலியுறுத்தல்

மரபு சாரா எரிசக்தியில் கவனம் செலுத்துமாறு ஜவுளித்துறைக்கு சைமா தலைவர் ரவி சாம் வலியுறுத்தி உள்ளார். தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) 63-ம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் கடந்த 14-ம் தேதி நடந்தது.

பொதுக்குழுவைத் தொடர்ந்து நடைபெற்ற 2022-23-ம் ஆண்டுக் கான முதல் நிர்வாகக் குழு கூட்டத்தில் சைமாவின் தலைவராக கோவை அத்வைத் டெக்ஸ்டைல்ஸ் பி.லிட். நிர்வாக இயக்குநர் ரவி சாம், துணைத் தலைவராக கோவை சிவா டெக்ஸ்யார்ன் லிட்.

நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.கே.சுந்தர ராமன், உபதலைவராக ஈரோட் டில் செயல்படும் பல்லவா டெக்ஸ் டைல்ஸ் பி.லிட். நிர்வாக இயக்குநர் துரை பழனிசாமி ஆகியோர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சைமா தலைவர் ரவிசாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜவுளித்துறை தனது போட்டித்திறனை தக்க வைத்துக் கொள்ளவும், சுற்றுச்சூ ழலை பாதுகாத்திட எடுக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்தவும் மரபு சாரா எரிசக்திகளான காற்றாலை மற்றும் சூரிய மின்னொளி ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு முக்கி யத்துவம் அளிக்க வேண்டும்.

பிற முக்கிய ஜவுளி உற்பத்தி மாநிலங்களில் வழங்கப்படும் கிரிட் பவரின் விலை ரூ.8-யைத் தாண்டிவிட்டது. அதன் மூலம் மின்சாரத்தை பெரிதும் சார்ந்துள்ள ஜவுளித்துறை தனது போட்டித்திறனை இழந்துள்ளது.

நூல் தயாரிப்பில் மின்சாரத்தின் பங்கு 40 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த ஜவுளித் துறையும் தனது 100 சதவீதம் மின் தேவையை மரபுசாரா எரிசக்தி மூலங்களான காற்றாலை மற்றும் சூரிய எரிசக்தியை நிறுவி பெற்றிட வேண்டியது அவசியமாகிறது.

முதல்வருக்கு கோரிக்கை
டிமாண்ட் கட்டணம், வீலிங் கட்டணம், டிரான்ஸ்மிஷன் கட்ட ணம் ஆகியவற்றை அசாதாரணமாக உயர்த்திருப்பதையும் ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறையை பின்பற்றாமல், மின் கட்டணத்தை அதனுடன் எந்தவித தொடர்பும் இல்லாத பணவீக்க விகிதத்தை கடைபிடித்து, ஆண்டுக்கு ஆண்டு 6 சதவீத உச்ச வரம்புடன் அதிகரிப்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசீலிக்க வேண்டும்.

மத்திய ஜவுளி அமைச் சகத்தால் சுரேஷ் ஏ கோட்டக் தலைமையில் பருத்தி உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்த ஏற்படுத் தப்பட்ட ஜவுளி ஆலோசனைக் குழுவில் சைமா இடம் பெற்று பெரும் பங்கினை ஆற்றி வருகிறது.

பருத்தி தட்டுப்பாட்டை எதிர் நோக்கியுள்ள நிலையில், பருத்தி மீது விதிக்கப்பட்டுள்ள 11 சதவீத இறக் குமதி வரியை நீக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பன்னாட்டு விலையில் தரமான மூலப்பொருட்கள் கிடைப்பதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு ரவிசாம் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img