fbpx
Homeபிற செய்திகள்மத நல்லிணக்க தீபாவளி கொண்டாட்டம்

மத நல்லிணக்க தீபாவளி கொண்டாட்டம்

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் ஏழை எளிய மக்களுடன் மத நல்லிணக்க தீபாவளி கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் ஏழை எளிய 50- குடும்பங்களுக்கு புத்தாடைகள், அரிசி, 22- வகையான மளிகைப்பொருட்கள், இனிப்பு கார வகைகள், பட்டாசுகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் நிர்வாக அறங்காவலர் கௌரிசங்கர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அப்துல் ஹக்கீம், 86-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கபீர் அஹமது, ஜக்கீரியா, 50-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கீதா சேரலாதன், பாபுஜான் கென்னடி, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உலக உணவு தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img