ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் சங்கர் லால் குமாவத் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பொதுமக்களிடம் 184 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற் கொண்டு தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர் லால் குமாவத் அறிவு றுத்தினார்.
தொடர்ந்து ராமநாதபுரம் மாவட் டம் பரமக்குடி வட் டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் வாரிசு தாரர்களுக்கு முதல மைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் ரூபாய் 1 லட்சத் திற்கான காசோலையினையும், நரிக்குறவர் வாரியம் சார்பில் 4 பயனாளிகளுக்கு புதிய உறுப்பினர்களுக்கான நலவாரிய அடையாள அட்டையினையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூபாய் 5018 மதிப்பீட்டில் சலவை பெட்டிகளையும், 6 பயனாளிகளுக்கு தலா ரூபாய் 5479 மதிப் பீட்டில் தையல் இயந் திரங்க ளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத், வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கந்தசாமி உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.