fbpx
Homeபிற செய்திகள்பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, மாலேகவுண்டம் பாளையம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நியாய விலைக்கடை, கிணத்துக் கடவு ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பாளையம் ஊராட்சியில் நடைபெற்று வரும் சாலை மேம்பாடு பணி மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம், ஆகிய வற்றை நேற்று (அக்.11) மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

கோவை மாவட்டம், கிணத்துக் கடவு ஊராட்சி ஒன்றியம், மாலே கவுண்டம்பாளையத்தில் உள்ள பொள்ளாச்சி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை நியாய விலைக்கடையில், மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்ட விவரம் குறித்த பதிவுகளை விற்பனை முனைய இயந்திரத்தில்(Point of Sale)ஆய்வு செய்தார்.

அரிசி, பாமாயில், சர்க்கரை, பருப்பு உள் ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விவரங்கள் குறித்த பதிவேடுகளையும் பார்வையிட்டார்.

அபராதம்
நியாயவிலைக் கடையில் பொருட்களில் இருப்பு குறைவாக இருப்பதை கண்டறிந்து மாவட்ட ஆட்சியர் நியாயவிலைக் கடை விற்பனையாளருக்கு அபாரதம் விதித்தார்.

பின்னர், குடும்ப அட்டைதாரர்களிடம் அனைத்து பொருட்களும், முறையாக கிடைக்கிறதா, பொருட்களின் தரம் மற்றும் எடைகள் சரியான அளவில் வழங் கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

தொடர்ந்து, மேட்டுப்பாளை யம் ஊராட்சியில், மாலேகவுண் டன்பாளையம் முதல் வடக்கி பாளையம் வரை ரூ.67.70 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருவதை, மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

சாலையின் ஓரங்களில் உள்ள வடிகால் அமைப்புகளை முறையாக சுத்தம் செய்து, புற்களை அகற்றி தண்ணீர் தடையின்றி செல்வதற்கு தேவை யான நடவடிக்கைகள் எடுக்க சம்மந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப் பட்டு வரும் பதிவேடுகளையும், பதிவறையினையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரேசுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கே.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் (பொ) அனிதா, உதவி இயக்குநர் (சாலை மற்றும் பாலங்கள்) செந்தில்குமார், கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனலெட்சுமி, ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் உலகநாதன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img