fbpx
Homeபிற செய்திகள்பொன்மாரியப்பன் சலூன் நூலகம் சார்பில் இலக்கிய வாசகர் திருவிழா

பொன்மாரியப்பன் சலூன் நூலகம் சார்பில் இலக்கிய வாசகர் திருவிழா

பொன்மாரியப்பன் சலூன் நூலகம் சார்பில் இலக்கிய வாசகர் திருவிழா தூத்துக்குடி மில்லர்புரத் தில் நடைபெற்றது.

இதில் எழுத்தாளர் எஸ்.ராம கிருஷ்ணன் தலைமை தாங்கி, வாசிப்பின் வெளிச்சம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

ஆசிரியர் ஜெயபால் முன்னிலை வகித்தார். வாசகர் அருண்பிரசாத் வரவேற்றுப் பேசினார்.

சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, எட்வின் சாமுவேல், மானாமதுரை காவல் ஆய்வாளர் முத்துகணேஷ், தூத்துக்குடி அரசு பொது மருத்துவர்கள் ஸ்ரீராம், ஆர்த்தி, எழுத்தாளர் முஹம்மதுயூசுப், வழக்கறிஞர் பொன்இசக்கி, 33 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பொன்னப்பன், தூத்துக்குடி மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் ராம்சங்கர் உள் பட அனைவருக்கும் எழுத்தாளர் ராமகிருஷ்ணன் புத்தகங்களை நினைவு பரிசாக வழங்கினார்.

பொன் மாரியப்பனுக்கு எழுத்தாளர் ராமகிருஷ்ணன், பட்டிமன்ற பேச்சாளர் ராஜா ஆகியோர் நினைவு பரிசு வழங்கினார்கள்.

நிகழ்வில் ராஜா, எட்வின் சாமுவேல், முஹம்மதுயூசுப், ராம் சங்கர் ஆகியோர் உரையாற்றினார்கள்.

நிறைவாக சலூன் நூலகர் பொன்மாரியப்பன் நன்றி கூறினார்.
விழாவில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img