கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்வளர்ச்சித்துறையின் மூலம் அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற 11 மாணவ மாணவியர்களுக்குக் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்.
அருகில் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் புவனேஷ்வரி உடன் உள்ளார்.