வேளாண் இயந்திரங்கள் மற்றும் சாதனங்கள் தயாரிப்பு துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்ஸ் லிட். ப்ரோ கபடி லீக் சீசனுக்கு, பெங்களூருவைச் சேர்ந்த ப்ரோ கபடி லீக் அணியான பெங்களூரு புல்ஸ்-ன் டைட்டில் ஸ்பான்சராக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு செயல்தளங் களில் பெங்களூரு புல்ஸ் அணியின் டைட்டில் ஸ்பான்சராக விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்ஸ் லிமிடெட் இடம்பெறு வதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
இதில், அதிகாரப்பூர்வ கபடி விளையாட்டு தொகுப்புகள் (கிட்ஸ்) மற்றும் இந்த அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்ஸியின் முன்புறம் ஆகியவையும் உள்ளடங்கும்.
இந்த கூட்டாண்மையை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தும் வகையில் விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்ஸ் லிமிடெட்-ன் தலைமை செயல் அலுவலர் ஆன்டனி செருகாரா, பெங்களூரு புல்ஸ் அணியின் தலைமை செயல் அலுவலர் கீர்த்தி முரளிகிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைந்து 2022 ப்ரோ கபடி லீக் சீசனுக்கான, அணியின் புதிய ஜெர்ஸியை அறிமுகம் செய்தனர்.
ப்ரோ கபடி லீக்-ன் 9-வது சீசன், பெங்களூருவில் ஸ்ரீ கன்டீரவா உள்ளரங்க மைதானத்தில் தொடங்கியது. விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்ஸ் லிமிடெட்-ன் தலைமை செயல் அலுவலர் ஆன்டனி செருகாரா கூறியதாவது:
பெங்களூரு புல்ஸ் அணியோடு இணைந்து செயல்படுவதிலும் மற்றும் இந்த ஆண்டுக்கான ப்ரோ கபடி சீசனின் அவர்களது வெற்றி பயணத்திற்கு ஆதரவு வழங்குவதிலும் மகிழ்ச்சியடைகிறோம்.
கபடி தான் இந்தியாவின் விளையாட்டு என்று பெருமையுடன் சொல்ல முடியும். கிராமப்புற இந்தியா எங்கிலும் கபடி விளையாட்டிற்கு கோடிக்கணக்கான நபர்களை கொண்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
விஎஸ்டியின் அணி வரிசையில் இடம்பெறும் டிராக்டர்களும், பவர்டில் லர்களும், அவற்றின் சக்தி, கச்சிதமான வடிவமைப்பு மற்றும் நீடித்து உழைக்கும் திறன் ஆகியவற்றிற்காக பிரபலமாக அறியப்படுகின்றன மற்றும் அங்கீகாரம் பெற் றிருக்கின்றன.
அதுபோலவே சக்தியையும், மனஉறுதியையும் வெளிப்படுத்தும் விளையாட்டாக கபடி திகழ்கிறது. ஆகவே தான் பெங்களூரு புல்ஸ் அணியுடனான இந்த ஒத்துழைப்பு நடவடிக்கையில் சிறப்பான கூட்டிணைவு ஆற்றல் இருப்பதை காண்கிறோம் என்றார்.