fbpx
Homeபிற செய்திகள்புதுமையான விஎஸ்டி சக்தி காம்பேக்ட் டிராக்டர் அறிமுகம்

புதுமையான விஎஸ்டி சக்தி காம்பேக்ட் டிராக்டர் அறிமுகம்

இந்தியாவின் காம்பேக்ட்டிராக்டர் சந்தைக்குள், விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்ஸ் லிமிடெட் தயாரிக்கும் ஒரு சிறப்பான காம்பேக்ட் டிராக்டரான விஎஸ்டி சக்தி MT 932 DI, அதிகம் விரும்பி தேடப்படும் சாதனங்களில் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது.

சரியான அம்சங்கள் கொண்ட சரியான டிராக்டர், விவசாயிகளுக்கு பல மணிநேர உழைப்பை மிச்சப்படுத்தும். சிறிய பரப்புள்ள வயல்களுக்கும், பண்ணைகளுக்கும் டிராக்டர்களே மிகவும் பொருத்தமானவை. அவை சிறியதாகவும், பன்முக பயன்பாட்டுக்கு உகந்தவையாகவும் மற்றும் விவசாய பணிக்கான முழு அளவிலான டிராக்ட ர்களைவிட குறைவான விலையில் கிடைப்பதுமே இதற்கான காரணங்களாகும்.

புல்லை வெட்டி சீர்செய்வது, சேர்ந்திருக்கும் குப்பைக்கூளங்களை அகற்றி சுத்தம் செய்வது, சுமைகளை எடுத்துச்செல்வது போன்ற எந்தவொரு பணியையும் இவற்றால் எளிதாகவும், திறம்படவும் கையாள முடியும் என்பதால், விவசாய செயல்பாடுகளின் திறனை இந்த டிராக்டர்கள் நேர்த்தியாக மேம்படுத்துகின்றன.
இந்திய காம்பேக்ட் டிராக்டர் சந்தை யில் மிக நவீனமான, அதிக புத்தாக்க அம்சங்கள் நிறைந்த தயாரிப்பு களுள் ஒன்றாக விஎஸ்டி சக்தி MT 932 டிராக்டர் திகழ்கிறது.

விவசாயிகளுக்கு தோழ மையான 30-க்கும் கூடுதலான ஸ்மார்ட் அம்சங்களை இது கொண்டிருக் கிறது. 50 ஆண்டு களுக்கும் அதிகமாக உழவு கருவிகள் (டில்லர்கள்) காம்பேக்ட் டிராக்டர் தயாரிப்பில் முன்னோடியாக புகழ்பெற்றிருக்கும் விஎஸ்டி டில்லர்ஸ் நிறுவனத்தால் இந்த இயந்திரம் நிறுவ னத்திற்குள்ளேயே அதன் ஆராய் ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவால் வடிவமைக்கப் பட்டு தயாரிக்கப் பட்டதாகும்.

இந்திய வயல்கள் மற்றும் பண்ணை களில் தனித்துவமான தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்வதற்கென இது பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மிக நவீன புத்தாக்கத்திற்காக 2021-ம் ஆண்டில் அப்போலோ ஃபார்ம் பவர் விருதினை இந்த டிராக்டர் வென் றிருக்கிறது.

திறன்மிக்க செயல்பாடு மற்றும் நல்ல வேகம் இருக்க வேண்டுமென்று விரும்புகிற விவசாயிகளுக்கு சக்தி வாய்ந்த இன்ஜின் திறனை உருவாக்குகிற 4 சிலிண்டர் இன்ஜின்களைகொண்டிருக்கிற விஎஸ்டி சக்தி MT 932, 30 (HP) குதிரை சக்தித் திறனை வழங்குகிறது.

உலகளவில் வேளாண்மைத்துறையில் நிகழ்ந்துவரும் இயந்திரமயமாக்கல், இத்தகைய காம்பேக்ட் டிராக்டர்களுக் கானத் தேவையை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைவான எடை கொண்டதாக இவை இருப்பதால் சாகுபடி செய்யப் படும் பயிர்களை கவன மாக கையாள முடியும்.

படிக்க வேண்டும்

spot_img