fbpx
Homeபிற செய்திகள்‘புதுமைப் பெண்’ திட்டத்தில் 637 பேருக்கு பெட்டகப் பை, வங்கி அட்டை

‘புதுமைப் பெண்’ திட்டத்தில் 637 பேருக்கு பெட்டகப் பை, வங்கி அட்டை

விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 637 மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண்’ பெட்டகப் பை மற்றும் வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது.

‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு’ என்ற பிற்போக்குத்தனமான சிந்தனைகள் வேரூன்றி இருந்த காலத்தில் பெரியார், அண்ணா போன்ற பெண் விடுதலைச் சிந்தனையாளர்களின் குரல்களுக்கு உயிர்ப்பூட்டும் விதமாக செயல்பட்டவர், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்.

டாக்டர் கலைஞர் நாட்டிலேயே முதன்முறையாக பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உரிமை வழங்க சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தினார்.

பெண் கல்வி முதற்கொண்டு அவர்களுக்கான திருமணம், மறுமணம், குழந்தைப் பேறு, கைம்பெண்களின் வாழ்வாதாரம், சமூக அந்தஸ்து மற்றும் அதிகாரப் பகிர்வு என பெண்கள் நலனுக்காக பல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தினார்.

டாக்டர் கலைஞர் வழியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்யும் வகையிலும், சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை மூலம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியின் போது மாதம் ரூ.1000/- உதவித்தொகை பெறும் விதமாக ‘புதுமைப் பெண்’ என்ற திட்டத்தினை சென்னையில் தொடங்கி வைத்தார்.

பெண்களுக்கு உயர் கல்வி அளிப்பதன் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்டவை ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ் மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளான பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப்பள்ளிகள், கள்ளர், சீர்மரபினப் பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலப்பள்ளிகள், சமூகப் பாதுகாப்புதுறை பள்ளிகள் ஆகியவற்றில் படித்து, தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்வராக இருக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயின்ற பின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

இவர்களுக்கும் 2022-2023-ம் கல்வியாண்டில், மாணவிகள் புதிதாக உயர்கல்வியில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வாயிலாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

இதர முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளும், தொழிற்கல்வியை பொறுத்தமட்டில் மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்கு செல்லும் மாணவிகளுக்கும், மருத்துவ கல்வியை பொறுத்தமட்டில் நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

‘புதுமைப் பெண்’ திட்டத்தில், சான்றிதழ் படிப்பு ((Certificate Course), ð†ìòŠ 𮊹 (Diploma /ITI /D.TEd. Courses), இளங்கலைப் பட்டம் (Bachelor Degree – B.A., B.Sc., B.Com., B.B.A, B.C.A., and all Arts & Science, Fine Arts Courses), தொழில் சார்ந்த படிப்புB.E., B.Tech., M.B.B.S., B.D.S. B.Sc., (Agri.), B.V.Sc., B.Fsc., B.L., etc.,)மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு(Nursing, Pharmacy, Medical Lab Technology, Physiotherapy etc.) போன்ற படிப்புகளை பயிலும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

முதற்கட்டமாக 67,000 கல்லூரி மாணவிகள் பயன்பெறும் வகையில் முதல்வர், தில்லி முதல்வர் ஆகியோர் சென்னையில், 2,500 மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம், நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய ‘புதுமைப் பெண்’ பெட்டகப்பை, வங்கி பற்று அட்டை(Debit Card) ஆகியவற்றை வழங்கினர்.

அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 637 மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண்’ பெட்டகப்பை மற்றும் வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது.

“பெற்றோரின் சுமை குறையும்”
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற மாணவிகள் தெரிவித்ததாவது:
என் பெயர் சௌமியா. 3-ம் வருடம் பி.ஏ படித்துக் கொண்டிருக்கிறேன். பெற்றோர் தினக்கூலி வேலை செய்கின்றனர். ‘புதுமைப் பெண்’ திட்டம், எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

வசதி இல்லாத குடும்ப பின்னணியில் இருந்து படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளுக்கு, இந்த திட்டம் மூலம் மாதந்தோறும் கிடைக்கும் ரூ.1000/- ஊக்கத் தொகையை கொண்டு, படிப்பிற்கு தேவையான செலவுகளை செய்ய முடியும்.

எனது பெற்றோர்கள் சம்பாதிக்கும் தொகை, குடும்ப செலவிற்கே போதாத நிலையில், சின்ன சின்ன படிப்பு செலவிற்காக பெற்றோரை கஷ்டப்பட வைக்காமல், இந்த தொகை மூலம் பூர்த்தி செய்ய முடியும். இந்த ஊக்கத்தொகை அளித்த முதல்வருக்கு நன்றி என்றார்.

“சொந்தக்காலில் நிற்க முடியும்”
எனது பெயர் காவியா. பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படிக்கிறேன். அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று, தற்போது உயர்கல்வி பயின்று வருகிறேன். முதல்வர் தற்போது செயல்படுத்தியுள்ள ‘புதுமைப் பெண்’ திட்டம் மூலம் ரூ.1000/- ஊக்கத்தொகையினை வங்கி கணக்கு மூலம் பெற்றுக் கொண்டேன்.

இந்த தொகை படிப்பிற்கு பயனுள்ளதாக இருக்கும். நோட்ஸ், ஜெராக்ஸ், புராஜெக்ட் உள்ளிட்டவற்றிற்கு பயன்படும். இத்திட்டத்தினால், ஏழை எளிய மாணவிகள் உயர்கல்வி பயின்று, வேலைவாய்ப்பை பெற்று சொந்தக்காலில் நிற்க முடியும். பெண் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வரும் முதல்வருக்கு நன்றி என்றார்.

தொகுப்பு:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
விருதுநகர் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img