கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் பீளமேடு புதூரில் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றார்
இன்று காலை முத்தமிழறிஞர் செம்மொழிக் காவலர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் சார்பில், கிழக்கு மண்டலப் பகுதிகளில் 1200 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு, வளர்க்கும் பணிகளை, கிழக்கு மண்டலத் தலைவர் திருமதி. இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் MC அவர்கள்,வார்டு எண்:52, ஹட்கோ காலனி பகுதியில் துவக்கி வைத்தார்.
கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் மாரிச்செல்வி, AEE சுந்தர்ராஜ், ATPO, EE ஜெயலட்சுமி,AE ஜெகதீஸ் வரி, ZSO முருகா, ஆகியோர் SI ஜீவன் முருகதாஸ் ஆகியோர் முன்னிலை யில்நடைபெற்ற இந்நிகழ்வில், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ, பீளமேடு பகுதிக் கழகம்-1 பொறுப்பாளர் வே.பாலசுப்பிரமணியம், வட் டக்கழகப் பொறுப்பாளர் தக டூர் செல்வம், அப்பாசாமி ,ஹட்கோ காலனி நிர்வாகிகள் வீராச்சாமி, மாரியப்பன், சுகாதார மேற்பார்வையாளர் சாந்தமூர்த்தி, கழக நிர்வாகிகள்,திரளான பொது மக்கள் பங்கேற்றனர்.
பீளமேடு புதூரில் ஆயிரத்திற் கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் காலை சிற் றுண்டி வழங்கப்பட்டது.