fbpx
Homeபிற செய்திகள்பில்லூர் 3ம் குடிநீர் திட்டம்: கட்டாஞ்சி மலைப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியினை ஆட்சியர் ஆய்வு

பில்லூர் 3ம் குடிநீர் திட்டம்: கட்டாஞ்சி மலைப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியினை ஆட்சியர் ஆய்வு

கோவை மாவட்டம் பில்லூர் 3ம் குடிநீர் திட்ட பணியின்ஒரு பகுதியாக கட்டாஞ்சி மலைப் பகு தியில் ரூ.72.49 கோடி மதிப்பீட்டில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.

இதனை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோவை மாநக ராட்சியுடன் குறிச்சி, குனிய முத்தூர் மற்றும் கவுண்டம் பாளையம் ஆகிய பகுதிகளும் 7 பேரூராட்சிகளும், ஒரு ஊராட்சியும் இணைக்கப்பட்டு மாநகராட்சி விரிவு செய்யப்பட்டது.

இவ்வாறு விரிவு செய்யப்பட்ட பகுதிகளுக்கு தேவையான குடிநீரை வழங்கும் பொருட்டு பில்லூர் 3ம் குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு ரூ.740.15 கோடி செலவில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்ட பணிகளானது நீரேற்று நிலையம், குழாய் அமைக்கும் பணிகள், சுத்திகரிப்பு நிலையம், சுரங்கப்பாதை அமைத் தல் என பல பிரிவுகளாக பிரித்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

கட்டாஞ்சி மலைப்பகுதியில் ரூ.72.49 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து குடிநீர் வடிகால் வாரிய பெருந்திட்ட கோட்ட அலுவலரி டம் விவரங்களை கேட்டறிந்தார்.

மேலும் அதிகாரிகள் கலெக்டரிடம் கூறுகையில், சுரங்கத்தின் மொத்த நீளம் 900 மீட்டர், இந்நாள் வரையில் 780மீட்டர் பணிகள் நிறைவடைந்துள்ளது. சுரங்கம் 10 மீட்டர் அகலத்திலும், 6 மீட்டர் உயரத்திலும் பராமரிப்பு காலத்தில் வாகனங்கள் உள்ளே சென்றுவர ஏதுவாக விசாலமாக அமைக்கப்பட்டு வருகிறது.

சுரங்கம் அமைக்கும் பணிகள் விரைவில் முடிவு பெறும். சுரங்கத்தினுள் சாலை அமைக்கும் பணிகள், குழாய் அமர்த்துவதற்கான பீடங் கள் ஆகிய எஞ்சியுள்ள பணிகள் அனைத்தும் நவம்பர் 2022ல் முடிக்கப்படும், என்றனர்.

பின்னர் ஆட்சியர் வெடி பொருள் பயன்பாட்டின்பொழுது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சுரங்கம் அமைக்கும் தொழில்நுட்ப முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பணிகளை விரைந்து முடிக்குமாறு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது குடிநீர் வடிகால் வாரியம் பெருந்திட்டக் கோட்ட நிர்வாகப் பொறியாளர் லட்சுமணன், உதவி நிர்வாக பொறியாளர் வெங்கடேசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img