பிரீமியம் அம்சத்துடன் புதிய கேரண்டீட் பென்ஷன் பிளான் பிலெக்ஸி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் ஆனது, ஐசிஐசிஐ ப்ரூ கேரண்டீட் பென்ஷன் பிளான் பிலெக்ஸி ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இது வழக்கமான பிரீமியம் செலுத்தும் வருடாந்திர திட்டம் ஆகும். இது வாடிக்கையாளர்களுக்கு நீண்ட காலமாக ஓய்வூதிய சேமிப்பை முறையாகச் சேமிக்கவும் கட்டமைக்கவும் உதவுகிறது.
ஒரு சேமிப்புக்குவியலை உருவாக்குவதற்கு, வாடிக்கையாளர்களின் வழக்கமான பங்களிப்புகளை வழங்குவதற்கும், நிதி ரீதியாக சுயாதீனமான ஓய்வு பெற்ற வாழ்க்கையை வாழ, வாழ்நாள் முழுவதும் உத்தரவாதமான வருமானத்தைப் பெறுவதற்கும், இந்த தயாரிப்பு, குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஐசிஐசிஐ ப்ரூ கேரண்டீட் பென்ஷன் பிளான் பிலெக்ஸி, ஏழு வகைகளில் கிடைக்கிறது, விரைவுபடுத்தப்பட்ட ஹெல்த் பூஸ்டர்களுடன் கூடிய லைஃப் ஆன்யூட்டி மற்றும் பூஸ்டர் வழங்கீடுகளுடன் லைஃப் ஆன்யூட்டி ஆகியவை தனித்துவமானவை.
இந்த தனித்துவமான வேறுபட்ட வகைகள், வருடாந்திர தயாரிப்புகளைத் தேடும் வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது அவர்களின் உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை தேவைகளைப் பூர்த்தி செய்ய, கூடுதல் பணப்புழக்கத்துடன், உத்தரவாதமான, வாழ்நாள் முழுவதும் வருவாயை, வழங்குகிறது.
ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸின் தலைமை விநியோக அதிகாரி அமித் பால்டா கூறுகையில், “தொற்றுநோய் வாழ்வாதாரத்தை சீர்குலைத்துள்ளது, இதனால் தனிநபர்கள் சேமிப்பு மற்றும் வருமானத்தைப் பாதுகாப்பதில், குறிப்பாக ஓய்வுபெறும்போது அதிக முக்கியத்துவம் கொடுக் கின்றனர்” என்றார்.