ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் குவாட் உச்சி மாநாடு நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்ற பிரதமர் மோடி, அங்கு அமெரிக்க அதிபர் ஜோபைடனை நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாஷிங்டனிலும், அதன் பின்னர் ஜி-20, சி ஓபி 26 உச்சி மாநாடுகளிலும் இருதலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
தெற்காசியா மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய பிரச்சனைகள் குறித்து இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.
ஜோ பைடன் கூறும்போது, உலகை ஆட்டிப்படைத்த கொரோனா ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதன் மூலம் உலக பொருளாதாரம் மீண்டு வருகிறது. கொரோனாவை ஒழிப்பதில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது.
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் பிரதமர் மோடியின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயக முறையில் அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதற்காக பிரதமர் மோடியை பாராட்டுகிறேன்
என தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் ஆட்சியாளர்கள் சர்வாதிகார ரீதியில் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் பிரதமர் மோடி ஜனநாயக ரீதியில் அதைவிட வேகமாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
அவருடைய ஆளுமைத்திறன் மெச்சத்தக்கதாக உள்ளது. இதன்மூலம் ஜனநாயக முறையில் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்பதையும் உணர்த்தியுள்ளார்.
ஜோ பைடனோடு சேர்ந்து நாமும் பிரதமர் மோடியை பாராட்டுவோம்!