fbpx
Homeபிற செய்திகள்பிஎப் திட்டத்தில் தாமதமாக செலுத்தினால் அபராதம் விதிப்பில் இருந்து விலக்கு தேவை - ஆணையரிடம் கொடிசியா...

பிஎப் திட்டத்தில் தாமதமாக செலுத்தினால் அபராதம் விதிப்பில் இருந்து விலக்கு தேவை – ஆணையரிடம் கொடிசியா வலியுறுத்தல்

கோவிட் நோய் தொற்று மற்றும் தொடர் உற்பத்தி இழப்பு போன்ற காரணங்களால் பாதிக்கப் பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இன்னும் அதில் இருந்து மீண்டு வராததால், குடும்ப நல வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் (இபிஎப்ஓ) தாமதமாக செலுத்தப்படும் தொகைக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்று கொடிசியா வலியுறுத்தி உள்ளது.

மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் நீலம் ஷாமி ராவ், கூடுதல் வருங்கால வைப்பு நிதி ஆணையர் டாக்டர் ஓ.கே.அனில் ஆகியோர் கோவை வந்திருந்தனர். அவர்களைச் சந்தித்த, கோவை கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ் பாபு, கோரிக்கை மனு அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: சிறு, குறு தொழில் நிறுவனங்களின் நிதி நிலையை கருத்தில் கொண்டு, 20-க்கும் கு¬ றவான பணியாளர்களுடன் இயங்கும் நிறுவ னங்கள், தென்னை நார், சணல், சிமென்ட் நிறுவனங்களுக்கு, வைப்பு நிதி திட்டத்தில் 10 சதவீதம், உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் செலுத்த வேண்டும் என்பதை பரிசீ லனை செய்ய வேண்டும்.

தானாக முன்வந்து பதிவு செய்யும் நிறுவனங் களுக்கு வைப்புநிதி திட் டத்தில், தாமதமாக செலுத்தப்படும்போது விதிக்கப்படும் அபராதத்தை குறைக்க வேண்டும்.

இபிஎப் போர்ட்டல் பிரச்சனை, ஆதார் சரிபார்ப்பு பிரச்சனை போன்றவற்றால் பாதிப்பு ஏற்படுவது உரி மையாளரின் தவறு அல்ல. ஆனால் அதற்கு அபராதம் விதிப்பதோ, வட்டி வசூலிப்பதோ கூடாது.

கோவிட் நோய் தொற்று காரணமாக 2020-21, 2021-22 ஆகிய கால காட்டங்களில் நிதி நெருக்கடியில் சிக்கிய சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இன்னும் அதில் இருந்து முழுமையாக மீளவில்லை.

உற்பத்தி இழப்பும், அதிக நாட்கள் மூடப்பட்டதால் ஏற்பட்ட இழப்பும் இன்னும் சீராகவில்லை.

நிறுவனங்களில் ஆய்வு செய்யச் செல்லும் கள அலுவலர்களுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்க வேண்டும்.

ஊதியத்தில் 50 சதவீதத்துக்கும் மேல் பங்களிப்பு இருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்க ளை பணம் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img