fbpx
Homeபிற செய்திகள்பால்தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு வீல்சேர் கூடைப்பந்து, பாரா வாலிபால் போட்டி

பால்தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு வீல்சேர் கூடைப்பந்து, பாரா வாலிபால் போட்டி

கோவை காருண்யா வில் நடைபெற்ற வீல்சேர் கூடைப்பந்து, பாரா வாலி பால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கள் வழங்கப்பட்டன.

கோவை காருண்யா நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் வேந்தர் பால் தினகரனின் 60-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மாநில அ விலான மாற்றுத் திற னாளிகளுக்கான வீல்சேர் கூடைப்பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்), பாரா வாலிபால் (ஆண்கள்) விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.

இதில் வீல்சேர் கூடைப்பந்து போட்டியில் சென்னை, கோவை, வேலூர், புதுச்சேரி ஆகிய அணிகளும், பாராவா லிபால் போட்டியில் கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநா தபுரம், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.

காருண்யா பேரா சிரியர்களும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத் னர்.இவ்விளையாட்டுப் போட்டியின் மூலம் தன்னம்பிக்கையையும், விடா முயற்சியையும் புதுப் பித்துக் கொண்டனர்.

நிறைவு விழாவில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்க ழக வேந்தர் பால் தினகரன் முன்னிலை வகித்தார்.

வெற்றி பெற்ற அணியினரை வாழ்த்தி வெற்றிக் கோப்பைகளையும் பரிசுகளையும் பொள்ளாச்சி எம்.பி. வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img