fbpx
Homeபிற செய்திகள்பக்கவாத நோய்க்கு அதிவிரைவு சிகிச்சை: கேஎம்சிஹெச் மருத்துவமனைக்கு ஏஞ்சல் விருது

பக்கவாத நோய்க்கு அதிவிரைவு சிகிச்சை: கேஎம்சிஹெச் மருத்துவமனைக்கு ஏஞ்சல் விருது

உரிய நேரத்தில் விரைவாக செயல்பட்டு, பக்கவாதத்தால் நோயா ளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, உலக பக்கவாத அமைப்பானது (வேர்ல்டு ஸ்ட்ரோக் ஆர் கனைசேஷன்) கேஎம்சிஎச் மருத்துவமனைக்கு டய மண்ட் ஸ்டேட்டஸ் என்ற வைர அந்தஸ்துடன் கூடிய ஏஞ்சல் விருதை அளித்து பெருமைப்படுத்தியுள்ளது.

நேர அடிப்படையிலான அவசரகால சிகிச்சையில், மிகச்சிறந்த தரத்தை பராமரித்து சிறந்து விளங்குவதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

கேஎம்சிஹெச்-ல் வருடா வருடம் ஆயிரத்திற்கும் அதிகமான பக்கவாத நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். நரம்பியல் நிபுணர்கள், ரேடியாலஜி சிகிச்சை நிபுணர்கள், அவசரகால மருத்துவ நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர் கொண்ட சிறப்புக் குழுவொன்று 24 மணி நேரமும் செயல்படுகிறது.

நோயாளி மருத் துவமனையில் அனும திக்கப்பட்ட 60 நிமிடங்க ளுக்குள் அவரது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்குவது மிகமிக அவசியம். பொன்னான காலம் என்று கருதப்படும் முதல் 3 முதல் 4.5 மணி நேரத்திற்குள் நோயாளிக்கு உரிய சிகிச்சை அளிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

மூளையில் ரத்தக் கட்டியை அகற்றி ரத்தம் உறைவதைத் தடுக்கும் உடனடி சிகிச்சை முறைக் கான வசதியானது ஸ்ட் ரோக் ரெடி என்று அழைக்கப்படும். ஒரு சில மருத்துமனைகளில் மட்டுமே இது உள்ளது. பக்கவாத சிகிச்சைக்காக ஆசியாவின் முதல் நட மாடும் ஆம்புலன்ஸ் உள்ளது.

இந்நிகழ்ச்சியில் கேஎம்சிஹெச் செயல் இயக்குநர் அருண்பழனிசாமி கூறியதாவது:
விரிவான பக்கவாத சிகிச்சை மருத்துவக்குழு நரம்பியல் நிபுணர்கள் பாஸ்கர், செந்தில் குமார், பிரகாஷ், ராஜேஷ் சங்கர் ஐயர், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கணேசன், சுரேஷ் ஜெயபாலன், ஜேகேபிசி பார்த்திபன், ரோஹித், அவசர சிகிச் சையின் தலைமை ஆலோசகர் டாக்டர் கே. திலீபன், நியூரோ ரேடி யாலஜிஸ்ட் டாக்டர் ஸ்ரீராம் வரதராஜன், இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி குழு டாக் டர் மேத்யூ செரியன், டாக்டர்கள் பங்கஜ் மேத்தா, டி.கோபிநாதன் தலைமையிலான ஐசியூ குழு, முடநீக்கம், மறுசீரமைப்பு துறை டாக்டர் எட்மண்ட் ஆகி யோர் இந்த மைல்கல் அங்கீகாரத்திற்காக உறுது ணையாக இருந்தனர். மேற்கு தமிழ்நாட்டிலேயே 24/7 செயல்படும் விரிவான பக்கவாத சிகிச்சை மையத்தைக் கொண்ட ஒரே மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்பதில் கேஎம்சிஎச் பெருமை கொள்கிறது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img